ஈரோடு: காதல் திருமணம் செய்த இளம் பெண் இறப்பு - கணவர் குடும்பத்தார் மீது சந்தேகம்?

ஈரோடு அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட IT நிறுவன பெண் ஊழியரின் இறப்பில் தொடர்புடயை கணவனின் குடும்பத்தார் மற்றும் அவரது உறவினர்களை கைது செய்யக்கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலத்திற்கு வந்த உறவினர்கள், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 12, 2023, 12:59 PM IST
  • ஐடி பெண் இறப்பில் சந்தேகம்
  • தலைமறைவான கணவர் வீட்டார்
  • பெண் வீட்டார் தொடர் போராட்டம்
ஈரோடு: காதல் திருமணம் செய்த இளம் பெண் இறப்பு - கணவர் குடும்பத்தார் மீது சந்தேகம்? title=

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள பூமாண்டக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது 29 வயது மகள் பூரணி என்பவர் பெங்களூரில் உள்ள தனியார் IT நிறுவனத்தில் பணியாற்றி வந்த போது, அவருடன் பணிபுரிந்த ஈரோடு கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த மதன்குமாரை காதலித்து கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பூரணியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் காதல் தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனையறிந்த பூரணியின் பெற்றோர்கள் மகள் மற்றும் குழந்தையை பார்க்க சென்றபோது, மதன்குமார் வீட்டார் அவர்களை தடுத்தாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | மிக்ஜாம் நிவாரண நிதி: பாதிக்கப்பட்டவர்கள் பெறுவது எப்படி?

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் உடல் நிலைகுறைவு காரணமாக பூரணி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்து விட்டதாக , மதன்குமார் குடும்பத்தினர் தெரிவித்ததை கேட்டு சந்தேகமடைந்த பெண் வீட்டார், பூரணியின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்காரி கோபி வருவாய் வட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பிரேசாதனையின் போது, பூரணியை கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பூரணியின் பெற்றோர்கள், கவுந்தப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்து விசாரணை நடைபெற்றது. 

இதனையடுத்து மதன்குமாரின் குடும்பத்தார் மற்றும் அவர்களது உறவினர்கள் தலைமறைவு ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த பூரணியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்து 30 நாட்களுக்கு மேலாகியும், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யமால் உள்ளதை கண்டித்தும், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளாத கோபி டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்ட அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.

மேலும் படிக்க | பொம்மை முதலமைச்சரே வெள்ளை அறிக்கை கொடுங்க - ஜெயக்குமார் விளாசல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News