எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் பட்டியல், துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலினை வெளியிட்டுள்ளார். அதே வேலையில் நடைபெறவுள்ள 18 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர் கொண்ட பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தொகுதிகளுக்காக வேட்பாளர்கள்...
- திருவள்ளூர் - பொன்.ராஜா
- தென் சென்னை - இசக்கி சுப்பையா
- ஸ்ரீபெரும்புதூர் - நாராயணன்
- காஞ்சிபுரம் - முனுசாமி
- விழுப்புரம் - கணபதி
- சேலம் - எஸ்.கே.செல்வம்
- நாமக்கல் - சாமிநாதன்
- ஈரோடு - செந்தில்குமார்
- திருப்பூர் - எஸ்.ஆர்.செல்வம்
- நீலகிரி - எம்.ராமசாமி
- கோவை - அப்பாதுரை
- பொள்ளாச்சி - முத்துகுமார்
- கரூர் - தங்கவேல்
- திருச்சி - சாருபாலா தொண்டைமான்
- பெரம்பலூர் - ராஜசேகரன்
- சிதம்பரம் - இளவரசன்
- மயிலாடுதுறை - செந்தமிழன்
- நாகை - செங்கொடி
- தஞ்சை - முருகேசன்
- சிவகங்கை - பாண்டி
- மதுரை - டேவிட் அண்ணாதுரை
- ராமநாதபுரம் - ஆனந்த்
- தென்காசி - பொன்னுத்தாய்
- நெல்லை - ஞான அருள்மணி
சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர்களின் பட்டியல்.
- பூவிருந்தவல்லி(தனி) - ஏழுமலை
- பெரம்பூர் - வெற்றிவேல்
- திருப்போரூர் - கோதண்டபானி
- குடியாத்தம்(தனி) - ஜெயந்தி பத்பநாபன்
- ஆம்பூர் - பாலசுப்பிரமணி
- அரூர்(தனி) - முருகன்
- மானாமதுரை(தனி) - மாரியப்பன் கென்னடி
- சாத்தூர் - சுப்பிரமணியன்
- பரமக்குடி(தனி) - முத்தையா