12 வயது சிறுமிக்கு ஆபாச படம்.. ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

Sexually Assaulting: ஸ்ரீபெரும்புதூர் அருகே 12 வயது சிறுமிக்கு ஆபாச படம் காண்பித்து, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 12, 2023, 05:49 PM IST
12 வயது சிறுமிக்கு ஆபாச படம்.. ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம் title=

Tamil Nadu Crime News: கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை அடுத்தஆவடி பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் 12 வயது மகள், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தண்டலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தன் தாயை பார்ப்பதற்காக 8:30 மணி அளவில், ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். 

அப்பொழுது அதே ஆவடி பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான கணேஷ் மற்றும் ராஜா ஆகிய இருவர்  வழியாக சென்ற 12 வயது சிறுமியை பார்த்துள்ளனர். இருவரும் சம்பந்தப்பட்ட சிறுமிக்கு தந்தை மூலம் ஏற்கனவே அறிமுகம் ஆகியுள்ளதால்,  இருவரும் வற்புறுத்தி ஆட்டோவில் ஏறுமாறு கூப்பிட்டதால் சிறுமி ஆட்டோவில் ஏறியுள்ளார். 

அப்பொழுது ஆட்டோவில் சிறிது தூரம் சென்ற பிறகு, ஆட்டோவை நிறுத்திவிட்டு செல்போனில் சிறுமிக்கு ஆபாச திரைப்படங்களை காட்டியுள்ளனர். இதனை எடுத்து 12 வயது சிறுமியை கணேஷ் மற்றும் ராஜா ஆகிய இருவரும், அந்த ஆபாச படம் வீடியோவில், இருப்பதை போல் செய்ய வேண்டும் என கூறி பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளனர். இதனால் 12 வயது சிறுமி கதறி அழுதுள்ளார் இதனைக் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: பொங்கி எழுந்த சின்மயிக்கு நியாயம் கிடைத்தது! டெலிவரி ஆளின் வாலை சுருட்டிய போலீஸ்

இது குறித்து உடனடியாக சிறுமியின் பெற்றோர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகு, இந்த வழக்கானது செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி ராஜா மற்றும் கணேஷ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இருவரும் இருபதாயிரம் ரூபாய் அபராத தொகை செலுத்த வேண்டும் எனவும் செலுத்த தவறினால் மேலும் ஆறு மாத காலம் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மேலும் படிக்க: கற்பழிப்பினால் ஏற்படும் கர்ப்பத்தை போன்ற கொடுமை வேறு எதுவும் இல்லை: கேரள நீதிமன்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News