தலையில் பால் குடத்தோடு மியா கலிஃபா... ஆடி மாதத்தில் அலப்பறை செய்யும் காஞ்சி பாய்ஸ்!

Tamil Nadu Viral News: காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் வைக்கப்பட்டுள்ள திருவிழா பேனரில் முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிஃபா பால் குடம் எந்தியிருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sudharsan G | Last Updated : Aug 8, 2024, 05:14 PM IST
  • ஆடி மாதத்தில் பல வழிபாடு தினங்கள் இருக்கும்.
  • நாளை ஆடி வெள்ளிக்கிழமை ஆகும்.
  • இதனால் கோயில்களில் தனி வழிபாடும் நடைபெறும்.
தலையில் பால் குடத்தோடு மியா கலிஃபா... ஆடி மாதத்தில் அலப்பறை செய்யும் காஞ்சி பாய்ஸ்!

Tamil Nadu Viral News: ஆடி மாதம் என்றாலே அது ஆன்மீக மாதம் எனலாம். அம்மன் கோவில்களில் நடைபெறும் திருவிழா, அதில் கூழ் காய்ச்சுவது, படையல் வைப்பது, கிடா வெட்டுவது, பூஜை, கொண்டாட்டங்கள் என ஆடி மாதத்தில் பயப்பக்தியுடன் பலரும் இருப்பார்கள். ஆடி மாதத்தில் ஆடி அமாவசை, ஆடி பூரம், ஆடி பதினெட்டு, ஆடி வெள்ளி என தொடர்ந்து வழிபாடு தினங்கள் அதிகமாக இருக்கும். 

Add Zee News as a Preferred Source

அம்மன் கோவில்களில் மட்டுமின்றி ஊர்தோறும் உள்ள மாடசாமி, கருப்பசாமி, அய்யனார் உள்ளிட்ட சிறுதெய்வ வழிபாடுகளும் இந்த மாதத்தில் அதிகமாக இருக்கும். இந்தாண்டு ஜூலை 17ஆம் தேதி தொடங்கிய ஆடி மாதம் ஆக. 17ஆம் தேதி வரை இருக்கும். 

அம்மன் கோவில் திருவிழா

அந்த வகையில், காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் வளாகத்தில், ஸ்ரீ நாகாத்தம்மன் மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் கோவிலும் அமைந்துள்ளது. நாகாத்தம்மன் மற்றும் செல்லியம்மன் கோவிலுக்கு கிராம மக்கள் ஆடி மாத திருவிழா நடத்தி வருவது கடந்த 12 ஆண்டுகளாக ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.

மேலும் படிக்க | பிரியாணி மேன் மீண்டும் கைது - கிறிஸ்துவ மதத்தை இழிவுபடுத்தியதாக புகார்

அந்த வகையில், ஆடி மாத வெள்ளிக்கிழமை நாளை (ஆக. 9) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாகாத்தம்மன் மற்றும் செல்லியம்மன் கோவிலில் வளைகாப்பு வைபோக விழாவும் நடைபெறுகிறது. இந்தநிலையில், குருவிமலை கிராமத்தை சேர்ந்த ஒரு சில இளைஞர்கள் திருவிழாவை முன்னிட்டு நூதன முறையில் பேனர் ஒன்றை வைத்துள்ளனர்.

பால் குடத்துடன் மியா கலிஃபா

அந்த பேனரில் ஆதார் கார்டு வடிவில் பேனர் வைத்தவர்களின் புகைப்படம் மற்றும் பெயர் உள்ளிட்ட தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 'எங்க பாசம் ஊரே பேசும் ' என பேனர்களுக்கே உண்டான 'அதிரடி' வாசகங்களுடன் அந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதில் அம்மன் புகைப்படங்கள் இடம் பெற்று இருக்கும் அதே வேளையில், பிரபல நடிகை மியா கலிஃபாவின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஆபாசப் பட நடிகையான மியா கலிஃபா மஞ்சள் புடவையில் பால்குடம் எடுத்துச் செல்வது போன்ற புகைப்படம் இடம்பெற்று இருப்பது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பொதுவாக திருவிழாக்களில் சினிமா நடிகர்களின் புகைப்படங்கள் இடம் பெறுவது வழக்கமானது என்றாலும், இந்த பேனரில் ஆபாச பட நடிகையாக இருந்த மியா கலிஃபாவின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இளைஞர்கள் மத்தியில் வேண்டுமானால் மியா கலிஃபா குறித்து தெரிந்திருக்கலாம், ஆனால் கிராம பெரியோர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. எனவே, இதனை பெரும்பாலும் ஊர் மக்கள் பொருட்படுத்தாமல் விட்டுள்ளனர். 

இந்த நிலையில் இந்த பேனர் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. இதை தொடர்ந்து, இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாகறல் போலிசார் சர்ச்சைக்குரிய பேனரை அகற்றினர். திருவிழாவிற்காக வைக்கப்பட்ட பேனரில் ஆபாச பட நடிகை புகைப்படம் இடம்பெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | சீமான் நடத்தும் நாம் தமிழர் கட்சி 2 ஆண்டுகளில் காணாமல் போகும் - ராஜீவ் காந்தி சவால்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News