Tamilnadu Political Latest Update: தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மதவெறி மற்றும் வெறுப்பு அரசியலுக்கு எதிரான பொதுக்கூட்டம் திருச்சி, பாலக்கரை பகுதியில் நேற்றிரவு (ஆக. 26) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரீப், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் குழந்தைய அரசன், ஜோதிமலை இறைப்பணி திருக்கூடம் திருவடிக்குடியில் சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், "பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான இயக்கம், கிறிஸ்தவர்களுக்கு எதிரான இயக்கம் என இந்துக்கள் நம்பும் அளவிற்கு, இந்துக்கள் ஒன்றிணைந்து பாஜகவை ஆதரிக்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.
'இந்துத்துவா பரப்பும் அவதூறு'
இந்துக்களின் மனதில் வெறுப்பு அரசியலை விதைத்து, வன்மத்தை தூண்டி அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் செயலில் பாஜக ஈடுபடுகிறது. இந்துக்களிடைடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தாமல் அவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகின்றனர். கிறிஸ்தவர்கள் பைபிள் உண்டு, ஜபம் உண்டு என்று இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் பக்கம் தலை வைப்பதே இல்லை. இஸ்லாமியர்களைப் போல கிறிஸ்தவர்களுக்கு அரசியல் இயக்கம் இல்லாதபோது அவர்கள் எப்படி இந்துக்களுக்கு எதிராக செயல்படுவார்கள்? அரசியல் பேசுவார்கள்?
சிறுபான்மையினரால் பெரும்பான்மை இந்துக்களுக்கு ஆபத்து என்று சொல்லுவது அப்பட்டமான அயோக்கியத்தனமான வெறுப்பு அரசியல்!, இஸ்லாமியர்கள் அடிமாடுகளை இறைச்சியாக பயன்படுத்துவதை, பசு மாட்டை கொல்வதைப் போல தவறாக சித்தரிக்கிறார்கள். லவ் ஜிகாத் என்ற இஸ்லாமியர்கள் காதல் என்ற பெயரில் பெண்களை பயன்படுத்துவதாகவும், ஐஎஸ் தீவிரவாத இயக்கங்களுக்கு அனுப்புவதாகவும் அவதூறு கூறுகின்றனர்.
மேலும் படிக்க | ஆளுநர்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை: தமிழிசை சௌந்தர ராஜன்
அம்பேத்கர்ஸ்மிருதி
மதமாற்றம், புனித பசு, லவ் ஜிகாத் உள்ளிட்ட மூன்று யுக்திகளை பயன்படுத்தி, சித்தரித்து பேசி, இந்துக்களிடம் வெறுப்பு அரசியலை விதைக்க திட்டமிடுகின்றனர். வெறுப்பை விதைப்பது, இந்து என்கிற உணர்வை அவர்களுக்கு ஊட்ட வேண்டும் என்பதற்காகவே. பெரும்பான்மை இந்துக்களை ஒன்றிணைக்க கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் பலிகிடா ஆக்குகின்றனர். இது அனைத்தும் வாக்கு வங்கிக்கான யுக்தி. வெளிப்படையாக சொல்வது இந்தியாவை இந்துராஷ்டிரம் என்பது, வெளிப்படையாக சொல்லாதது அம்பேத்கர் வகுத்த அரசியல் அமைப்பு சட்டத்தை இல்லாமல் ஆக்குவது இதுவே பாஜகவின் இந்துத்துவா!
அரசியல் நீதி, சமூக நீதி, பொருளாதார நீதி இதனை இறையாண்மையுள்ள ஜனநாயக அரசு உறுதிப்படுத்தும். சுதந்திரம், சமூகம், சமத்துவம், சகோதரத்துவம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டுமே தவிர ஒரே நாடு, ஒரே கொள்கை என சொல்லக்கூடாது. இந்து மதத்தை இந்த நாட்டின் அரசு மதமாக அறிவிக்க வேண்டும் என நினைப்பவர்கள், அனைவரும் ஒன்றுதான், பார்ப்பனர்களும், அருந்ததியினர்களும் ஒன்றுதான் என பிரதமர் மோடி அறிவிக்கட்டும், சகோதரத்துவத்தை கொண்டுவரட்டும் பிறகு இதை பேசட்டும்.
மனு ஸ்மிருதியை எதிர்த்த அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டத்தில் அது குறித்து எப்படி எழுதுவார். ஆனால் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் அம்பேத்கர்ஸ்மிருதி ஆகும். மனு ஸ்மிருதியில் சகோதரத்துவம் இல்லை, அம்பேத்கர்ஸ்மிருதியில் சகோதரத்துவம் உள்ளது.
இந்துத்துவத்தில் சகோதரத்துவம் இல்லை
சுப்ரமணிய சுவாமி சங்கராச்சாரியாரை பார்க்க சென்றால் நாற்காலியில் அமர முடிகிறது. ஆனால் தமிழிசை ஆளுநராக இருந்தபோதிலும் கீழே அமர வேண்டி உள்ளது. இந்துத்துவத்தில் சகோதரத்துவம் இல்லை. மோடி அம்பேத்கரை மனதில் எதிரியாக நினைத்துக் கொண்டு அம்பேத்கர் சிலையை தொட்டு வணங்குவார். அரசியலமைப்பு சட்டத்தை எதிரியாக நினைத்துக் கொண்டே அதை பார்ப்பார். காரணம் அது இந்துத்துவாவை அமல்படுத்த தடையாக இருக்கிறது. சனாதனத்தை தகர்த்தது, இந்திய அரசியலமைப்பு சட்டம்.
இந்தியாவில் ஆபத்தான அரசியல் செய்து கொண்டிருக்கும் கும்பலின் கையில் ஆட்சி அதிகாரம் சிக்கியுள்ளது. 2024 தேர்தலில் அவர்களை தூக்கி எறியாவிட்டால் இந்திய அரசியலமைப்பு சட்டம் தூக்கி எறியப்படும். வன்முறை அதிகரிக்கும். எனவே அந்த வாய்ப்பை நாம் ஏற்படுத்தி தர கூடாது" என்றார்.
மேலும் படிக்க | கட்டுச் சோற்றை முழுங்கும் பெருசாலிகள் போல ஊழல் செய்யாதீர்கள் - துரைமுருகன் ஆவேசம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ