வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி தலைவர்! கைது செய்து சிறையில் அடைப்பு!

வேலூர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டதாக வேலூர் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் உட்பட 3 பாஜகவினர் கைது செய்து சிறையில் அடைப்பு.  

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 19, 2024, 12:03 PM IST
  • வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர்.
  • கத்தியை காட்டி மிரட்டு பணம் பறிப்பு.
  • கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி தலைவர்! கைது செய்து சிறையில் அடைப்பு! title=

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்தவர் கிளி என்கிற சதீஷ் (34). இவர் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர் பள்ளிகொண்டா அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்டதாக விஜய் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி தலைவர் கிளி என்கிற சதீஷை கைது செய்து நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | திமுகவுக்கு அடுத்த சிக்கல்! பூதாகரமாகும் யானை தந்தம் கடத்தல் வழக்கு - பின்னணி!

மேலும் இவர் மீது அரக்கோணம் பகுதியில் கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல காட்பாடி அடுத்த வெள்ளக்கல் மேடு பகுதியில் காங்கேயநல்லூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவரை வழிமறித்த இரண்டு இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் இருவரையும் பிடித்து வைத்து காட்பாடி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில் விருதம்பட்டு டி.கே.புரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பதும் இவர் பாரதிய ஜனதா கட்சியில் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆக இருப்பதும், மற்றோருவர் அதே பகுதியை சேர்ந்த நவீன் என்றும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாவட்ட பொறுப்பாளராக இருப்பதும் தெரிய வந்தது. 

bjp

இதனையடுத்து பிரபாகரன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காட்பாடி காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஒரே நாளில் இரு வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பாஜக பிரமுகர்கள் கைதானது மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | கோடை காலத்திலும் சளி பிடித்து மூக்கடைப்பா... குணப்படுத்த ஈஸி இதை செய்யுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News