வினோத வழிபாடு! பக்தர்களின் தலையில் விளக்குமாறால் அடிக்கும் பூசாரி

Viral News In Tamil Nadu: ஒசூர் அருகே 383 ஆண்டுகால பழமைவாய்ந்த திருவிழாவில் துடப்பம், முறத்தால் அடிவாங்கும் வினோத வழிபாடு. காலம் காலமாய் பின்பற்றப்படும் வழிபாட்டு முறை குறித்து பார்ப்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 12, 2023, 07:36 PM IST
  • சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பல்வேறு பூஜைகளுடன் வெகு விமர்சையாக திருவிழா நடக்கும்.
  • 10 நாட்கள் உணவில்லாமல் விரதமிருக்கும் பூசாரி மீது சாமி அருள் தருவதாக நம்பப்படுகிறது.
  • துடப்பம், முறத்தால் அடிவாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்.
வினோத வழிபாடு! பக்தர்களின் தலையில் விளக்குமாறால் அடிக்கும் பூசாரி title=

Krishnagiri News: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் 383 ஆண்டுக்காலம் பழமை வாய்ந்த தர்மராஜ சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடக்கும் திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து பல்வேறு பூஜைகளுடன் வெகு விமர்சையாக நடைப்பெறுவது வழக்கம்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தோரோட்டம் நடைப்பெற்றது, ஸ்ரீ தர்மராஜ சுவாமி அமத்திருந்த தேரினை டி.கொத்தப்பள்ளி சுற்று கிராம மக்களை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். திருவிழாவிற்காக 10 நாட்கள் விரதமிருக்கும் தர்மராஜ சுவாமி கோவில் பூசாரிக்கு அருள் வந்து, பக்தர்களை துடப்பம், முறத்தால் தலை மீது அடிக்கும் வினோத வழிபாடு நடைப்பெற்றது.

மேலும் படிக்க: 12 வயது சிறுமிக்கு ஆபாச படம்.. ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

10 நாட்கள் உணவில்லாமல் விரதமிருக்கும் பூசாரி மீது தர்மராஜ சாமி அருள் தருவதாக நம்பப்படுகிறது. துடப்பம், முறத்தால் அடிவாங்குவதால் குழந்தை பாக்கியம்,கடன் பிரச்சனைக்கு தீர்வு, திருமண தடை நீங்கி குடும்பங்களில் சமாதானம் உள்ளிட்டவை நடக்கும் என்பது ஐதிகம்.

துடப்பம், முறத்தால் அடிவாங்கும் வினோத வழிப்பாட்டினை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்களும், அதேபோல கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களும் கலந்துக்கொண்டனர். மேலும் அங்க்நு வந்தவர்கள் பலர் சாமி அருள்வேண்டி துடப்பம், முறத்தால் அடிவாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த தேரோட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்ப்பட்ட பங்கேற்று வழிபட்டனர்.

மேலும் படிக்க: இபிஎஸ் வைத்த குற்றச்சாட்டு... உடனே முதல்வர் ஆக்சன் - சபாநாயகர் சொன்னாது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News