சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வோம் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது.சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு ரூ10 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம். சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனடியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வோம் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். மேலும் புதிய அதிமுக சட்டசபை தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இனி உறுப்பினராக இல்லை என அவர் தெரிவித்தார்.
We will file review petition, a new legislative party leader has been elected. #Panneerselvam no longer party member: M Thambidurai,AIADMK pic.twitter.com/p7XceOqGzy
— ANI (@ANI_news) February 14, 2017