தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை அல்லது கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் மழை அளவு பதிவாகி உள்ளது. அதேபோல கேரளா கடலோர பகுதிகளிலும் மற்றும் தென் கர்நாடக பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். மழை அல்லது இடி மின்னல் கூடிய மழை சில பகுதிகளில் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிகபட்சம் 32 டிகிரி மற்றும் குறைந்தபட்ச 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
#TamilNaduFishermen weather warning for next 18 hours on 18th oct’18 pic.twitter.com/xHUsn172Cq
— TN SDMA (@tnsdma) October 18, 2018