ஞாயிற்றுக்கிழமை நிலவரம்: டீசல் விலை உயர்வு; பெட்ரோல் விலை?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று (22.12.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 22, 2019, 07:49 AM IST
ஞாயிற்றுக்கிழமை நிலவரம்: டீசல் விலை உயர்வு; பெட்ரோல் விலை? title=

புது தில்லி இன்று (ஞாயிற்றுக்கிழமை ) பெட்ரோல் விலை விகிதங்கள் நிலையானதாக இருந்த போதிலும், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .77.58 ஆக நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் நிலையாக உள்ளது. அதே நேரத்தில், டீசல் விலையில் லிட்டருக்கு 22 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ 70.56 ஆக அதிகரித்துள்ளது. அரசாங்க எண்ணெய் நிறுவனங்கள், விலைகளை மதிப்பாய்வு செய்த பின்னர், ஒவ்வொரு நாளும் பெட்ரோல் மற்றும் டீசல் விகிதங்களை நிர்ணயிக்கின்றன. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் திருத்தப்பட்டு, தினசரி காலை 6 மணி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை வெளியிடுகின்றன.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இது ஒவ்வொரு வாரமும் பெட்ரோல், டீசல் விலையை மறுசீரமைக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட நடைமுறையாகும்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News