எப்போது டிஸ்சார்ஜ் ஆகிறார் நடிகர் ரஜினிகாந்த்; வெளியான புதிய தகவல்!

ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் என அவரது சகோதரர் சத்தியநாராயணன் தகவல்!!

Written by - ZEE Bureau | Last Updated : Dec 27, 2020, 08:38 AM IST
    1. ரஜினி உடல்நிலை சீராக உள்ளது; எந்த பாதிப்புமில்லை எனவும் தகவல்.
    2. நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் என அவரது சகோதரர் சத்தியநாராயணன் தகவல்.
    3. திட்டமிட்டபடி ஆலோசனை செய்து அரசியல் கட்சியை ரஜினிகாந்த் தொடங்குவார்.
எப்போது டிஸ்சார்ஜ் ஆகிறார் நடிகர் ரஜினிகாந்த்; வெளியான புதிய தகவல்!

ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் என அவரது சகோதரர் சத்தியநாராயணன் தகவல்!!

ரஜினிகாந்த உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால், ரத்த அழுத்தம் இன்னமும் அதிகமாக இருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) இன்று மாலை டிஸ்சார்ஜ் என அவரது சகோதரர் சத்தியநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார். 

ஹைதராபாத்தில் அண்ணாத்த (Annaatthe) திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார் ரஜினிகாந்த். அப்போது, படப்பிடிப்பு குழுவினர் சிலருக்கு, கொரோனா தொற்று (Coronavirus) ஏற்பட்டதை அறிந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால், திடீரென உடல் சோர்வு ஏற்பட்டதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார்.

No description available.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்த அழுத்தத்தில் (Blood pressure) மிகுந்த வேறுபாடு இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, நேற்று முதல் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றைய செய்தி குறிப்பின்படி, ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் சோர்வு ஆகிய இரண்டையும் தவிர்த்து வேறு எந்த பிரச்சினையும் அவருக்கு இல்லை என்றும், தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ALSO READ | ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: விரைவில் குணமடைய பிரபலங்கள் வாழ்த்து

இந்நிலையில், ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை (Apollo Hospital, Hyderabad) நிர்வாகம் இன்று காலை 10.30 மணிக்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்., எங்களது மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது. ரஜினிகாந்தின் (Actor Rajinikanth) ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அதேநேரம் நேற்றைவிட இன்று நிலைமை முன்னேறி உள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் வேறு எந்த ஒரு கவலை தரக்கூடிய அம்சமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்று மீண்டும் அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இன்று மாலைக்குள் அந்த அறிக்கை கிடைக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை அல்லது நாளை காலை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். திட்டமிட்டபடி ஆலோசனை செய்து அரசியல் கட்சியை ரஜினிகாந்த் தொடங்குவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார். 

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்..

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News