பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? எடப்பாடி பழனிச்சாமி பகீர் குற்றச்சாட்டு!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பிரம்மாண்ட கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Oct 3, 2023, 08:41 AM IST
  • தமிழக மக்கள்தான் எஜமான்.
  • அவர்கள் தான் தங்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.
  • அவர்களை மதித்து நாங்கள் நடப்போம்.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? எடப்பாடி பழனிச்சாமி பகீர் குற்றச்சாட்டு!

சில சமயங்களில் சம்பந்தமில்லாத கொள்கைகளை வகுத்து அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தேசிய கட்சிகள் நிர்பந்திப்பதாக எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். சேலம் மாநகரில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் சேலம் மாநகர் மாவட்ட  அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவாக்கவுடனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, தமிழகத்தைப் பொறுத்த வரையில் அதிமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது.  வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற தேவையான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | காலியாகும் திமுக கூடாரம்... நடுக்கத்தில் ஸ்டாலின் - பழ.கருப்பையா பராக்... பராக்...!

அதிமுகவை பொருத்தவரையில் தமிழக மக்களுக்காக தமிழக மக்களின் உரிமைக்காக போராடி வருகிறது என்றும் தமிழக மக்களின் நலனுக்காக அதிமுக என்றும் போராடும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசும்போது நம்முடைய கட்சியின் இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வை கருத்தில் கொண்டும் தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் உணர்வுகளை தெரிவித்தனர். இதனையடுத்து ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களை உணர்வை ஏற்று பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக ஒரு மன தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார்.  மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் வெளியேறுகிறது என்று அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.  இதுவரை எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாக கூட்டணி குறித்து தெரிவிக்கவில்லை என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த கூட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைப்பதாக தெரிவித்தார்.

பாஜக கூட்டணி இருந்து வெளியேறுவது குறித்து பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு அல்ல, ஒட்டுமொத்த அதிமுக முடிவு என்று தெரிவித்தார். அதிமுகவை பொறுத்த வரையில் மக்களுக்கு சேவை செய்தும் இயக்கம் பல மாநிலங்களில் பல மாநில கட்சிகள் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் பிரதமரை தேர்ந்தெடுக்கிரார்கள். அதுபோலத்தான் அதிமுகவும் தமிழகத்தில் கூட்டணி அமைத்து அதிக வெற்றி பெற்று தமிழகத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் என்றார். தமிழக மக்கள்தான் எஜமான், அவர்கள் தான் தங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களை மதித்து நாங்கள் நடப்போம் என்றார். 
 சில நேரங்களில் தேசியக் கூட்டணியில் உள்ள தேசியக் கட்சி நமக்கு உடன்படாத சில முடிவுகளை எடுக்கும் போது அதை நாம் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதை நிறைவேற்றுகின்ற கட்டாயம் ஏற்படுகிறது. இனி அது போன்ற நிலைமை இல்லை என்றால் தமிழக மக்கள் தான் எஜமான்கள், அவர்கள்தான் முதலாளிகள், அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்வது தான் அதிமுகவின் எண்ணம், தமிழக மக்களின் உரிமைகளையும் மீட்டெடுப்போம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | பழனி கோவிலுக்கு செல்வோர் கவனத்திற்கு! இனி இவற்றை கொண்டுபோக முடியாது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News