சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறித்து பரவுவதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களின் குழு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஏப்ரல் 14-க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
இதனையடுத்து இன்று மாலை 5 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் தமிழகத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவு குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி உட்பட சில மான் மாநிலங்கள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது.
எனவே இன்றைய ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு அதிகம் எனத் தெரிகிறது. இந்த கூட்டம் முடிந்தவுடன் முதல்வர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.