கர்நாடக மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க முடியாது: நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்

மேட்டூர் உபரி நீர் திட்டத்தை தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவார் என மேட்டூர் அணையை ஆய்வு செய்த பின்பு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 16, 2021, 02:31 PM IST
கர்நாடக மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க முடியாது: நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் title=

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியிலுள்ள மேட்டூர் அணையை ஆய்வு செய்தார்.41-வது முறையாக மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 140 அடியில் நீர்ப்பிடிப்பு அளவான 120 அடியை எட்டியுள்ளது. 2019க்கு பிறகு அணையின் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆணையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக மேட்டூர் அணையின் மேல்பகுதி மற்றும் 16 கண் பாலம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர் 16 கண் பாலத்தில் மலர் தூவினார்.

திப்பம்பட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் மேட்டூர் உபரி நீர் திட்ட பணிகளை ஆய்வு செய்தபின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக அரசு தாமதப்படுத்திய மேட்டூர் உபரி நீர் திட்டத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவார் என தெரிவித்தார். 

மேலும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது அணையின் தரம் நன்றாக உள்ளது  எந்த பாதிப்பும் அணைக்கு இல்லை எனவும் தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்தில் படிப்படியாக ஏரிகள் தூர் வாரப்படுகிறது. இதனால் தற்போது ஐந்திற்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உள்ளது எனவும் மேட்டூர் சரபங்கா திட்டம் செயல்படுத்த நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

ALSO READ | மேகதாது விவகாரம்: கர்நாடக அமைச்சருக்கு சட்டப்படி பதிலடி தந்த அமைச்சர் துரைமுருகன்

குறிப்பாக இன்னும் பல இடங்களில் நில ஆர்ஜிதம் செய்ய வேண்டிய தேவை உள்ளது எனவும், இப்பணிகள் முடிந்த பின்பு இந்த திட்டம் சிறப்பாக நிறைவேற்றப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். முல்லை பெரியாறு அணை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் கேரள அரசு பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இந்தமுறையும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்றார்.

ஆரம்பகாலம் முதல் குறிப்பாக 1979 ஆண்டு முதல் அன்றைய கேரள நீர்வளத்துறை செயலாளர் கே.ஜி. தாமஸ் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துவிட்டு மறுநாளே திருவனந்தபுரத்தில் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்க வேண்டும் என கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து தற்போது நீர்வள செயலாளராக உள்ள கேசி தாமஸ் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை நீதிமன்றம் இதற்கு சரியான பதிலை தரும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

தமிழகத்தில் புதிதாக எந்த அணையும் கட்ட வாய்ப்பு இல்லை எனவும் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிதாக அணை (Mekedatu dam) கட்டி விடமுடியாது அருகில் இருக்கும் புதுச்சேரி, தமிழக மாநிலத்தில் கருத்து கேட்ட பின்பு ஆட்சேபனை இல்லை என்றால் மட்டுமே மேகதாதுவில் அணை கட்ட முடியும் எனவும் தெரிவித்தார். மேலும் காவிரி கோதாவரி திட்டம் தொடர்ந்து பேச்சுவார்த்தையிலேயே உள்ளது எனவும் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன் மக்களுக்கு தேவையான திட்டங்களுக்கு திமுக அரசு தொடர்ந்து திட்டங்களை தீட்டி நிறைவேற்றும் எனவும் தெரிவித்தார்.

ALSO READ: RAIN ALERT! இனி ஹெலிகாப்டரில் வெள்ள மீட்புப் பணி - அமைச்சர் அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News