தமிழக அரசு சார்பில் தொழில் முனைவோருக்கு புத்தாக்க பயிற்சி!

தமிழக அரசின் சார்பில் சிறு, குறு தொழில் முனைவோருக்கு 3 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

Last Updated : Jun 19, 2018, 08:53 PM IST
தமிழக அரசு சார்பில் தொழில் முனைவோருக்கு புத்தாக்க பயிற்சி! title=

தமிழக அரசின் சார்பில் சிறு, குறு தொழில் முனைவோருக்கு 3 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

தமிழ்நாடு அரசின் தன்னாட்சி சேவை நிறுவனமான ‘தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்’ (EDII-TN) 2001-ஆம் ஆண்டில் தமிழக அரசால் துவங்கப்பட்டது. இச்சேவை நிறுவனம் மூலம் சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் குழுமம் சார்ந்த அமைப்பினருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் கருத்தமர்வுகள் தொடர் பயிற்சி பட்டறைகள், அனுபவ பகிர்வு மற்றும் விழிப்புணர்வுக் கல்வி ஆகியவற்றை மாநிலம் முழுவதும் நடத்தி வருகின்றது. 

டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட சிறு குறு மற்றும் நடுத்தர குழுமங்களுக்கான பவுன்டேசன் நிறுவனமானது (Foundation of MSME Clusters) 2005-ஆம் ஆண்டு துவங்கி குழுமங்களை உருவாக்குவதிலும், அதனைத் தொடர்ந்து நடத்திடவும் தேவையான அறிவார்ந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றது. இந்நிறுவனம் மூலமாக 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 200-க்கும் அதிகமான குழுமங்களில் உள்ள 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்துள்ளன.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது வருகின்ற ஜூலை 18-ஆம் நாள் துவங்கி ஜூலை 20, 2018 வரை (தங்குமிடம் வசதியற்ற) மூன்று நாட்கள் கருந்தரங்கினை மேற்கண்ட நிறுவனத்துடன் இணைந்து EDII-TN வளாகப் பயிற்சி அரங்கில் நடத்திட உள்ளது. 

இந்த பயிற்சியில் குழும அமைப்பு ஏற்படுத்த தேவைப்படும் நிதியுதவி பெறுவதற்காக தேவைபடும் ‘விரிவான திட்ட அறிக்கை’ தயாரித்தல் எவ்வாறு என்பதை பற்றிய தகவல்கள் தரப்படும். குழுமங்களின் தொழில்நுட்பங்கள், நிதி மற்றும் உணர் திறன் பகுத்தாய்வு ((Finance and Sensitivity Analysis), தொழில்நுட்ப பொருளாதார செயலாக்க மதிப்பீடு (Techno Economic Feasibility Appraisal) போன்றவை குறித்து தெளிவுபடுத்தப்படும். 

மாநில அரசு துறை அலுவலர்கள் / வங்கியாளர்கள் / நிபுணர்கள் / குழும நிர்வாக உறுப்பினர்கள் / ஆலோசகர்கள் போன்றோருக்கு இந்த பயிற்சியின் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் பற்றிய முழு விவரங்கள் அறிய உதவியாக அமையும். 

இப்பயிற்சியில் பங்குகொள்வோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும். மேற்கொண்டு பங்கேற்பு விதிமுறைகள் மற்றும் இதர விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்: 

திரு.ஏ.னு.ஆனந்தன்
துணை இயக்குநர், EDII, சென்னை, 
கைபேசி எண்: 8668102090,
email : ddcdp@editn.in 
இணையதள முகவரி: www.editn.in
முன் பதிவு செய்யவேண்டிய கடைசி நாள்: 28 ஜீன் 2018. 

Trending News