60 லட்சம் போலி வாக்கு அட்டையை சமர்பித்தது காங்கிரஸ்!!

மத்திய பிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர் சேர்க்கப்பட்டிருப்பதாக ஆதாரத்தை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தது காங்கிரஸ்!! 

Last Updated : Jun 3, 2018, 05:37 PM IST
 60 லட்சம் போலி வாக்கு அட்டையை சமர்பித்தது காங்கிரஸ்!!  title=

மத்திய பிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர் சேர்க்கப்பட்டிருப்பதாக ஆதாரத்தை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தது காங்கிரஸ்!! 

சமீபத்தில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் சுமார் 60 லட்சம் போலி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் கூறியது.

இதை தொடர்ந்து, தேர்தல் கமிஷனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஒரு குறிப்பில், காங்கிரஸ் கட்சி அதைப் பற்றி ஆதாரங்களை அளித்ததாகக் கூறியது. மேலும், இது தொடர்பான ஆதாரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளது. வரவிருக்கும் தேர்தலில் குளறுபடி செய்ய ஆளும் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் வாக்காளர் பட்டியலில் 60 லட்சம் பேர் வரை போலி வாக்காளராக சேர்க்கப்பட்டுள்ளனர். 

போலி பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆதாரத்தை தேர்தல் கமிஷனிடம் வழங்கியுள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இங்குள்ள பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து எதிர்கட்சியினரும் ஒன்று சேர முடிவு செய்துள்ளோம் என கட்சியின் மூத்த நிர்வாகி கமல்நாத் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, பாரதீய ஜனதா கட்சி இந்த முரண்பாட்டின் பின்னணியில் மத்திய பிரதேச மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா குற்றம் சாட்டினார். 10 ஆண்டுகளில் மக்கள்தொகை 24 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என்றாலும் வாக்காளர் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒரு வாக்காளர் பெயர் 26 பட்டியல்களிலும் தோன்றுகிறது என்று சிந்தியா மேலும் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாலும் வாக்காளர் எண்ணிக்கை மட்டும் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளது எப்படி என்றும் கேட்டுள்ளார்! 

 

Trending News