80% வரை தள்ளுபடி, Flipkart இல் தீபாவளி விற்பனை விரைவில் ஆரம்பம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆன்லைன் இணையதளங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றன.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 26, 2021, 02:15 PM IST
80% வரை தள்ளுபடி, Flipkart இல் தீபாவளி விற்பனை விரைவில் ஆரம்பம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆன்லைன் இணையதளங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றன. Flipkart இல் தீபாவளி விற்பனையை மீண்டும் ஆரம்பம் ஆக உள்ளதாக அறிவித்துள்ளது. புதிய Flipkart Big Diwali Sale அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

Flipkart Plus உறுப்பினர்கள் 1 நாள் முன்னதாகவே இந்த சிறப்பு அணுகலைப் பெறுவார்கள். எஸ்பிஐ கார்டுகளில் வாடிக்கையாளர்கள் 10 சதவீதம் உடனடி தள்ளுபடியைப் பெறுவார்கள். இந்த 7 நாள் விற்பனையில் கிடைக்கும் சலுகைகள் குறித்து பிளிப்கார்ட் ஒரு பார்வையை வழங்கியுள்ளது. எந்தெந்த பிரிவில் எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும் என்பதை அறியலாம்.

ALSO READ: Buy Now Pay Later: பண்டிகை கால ஷாப்பிங்கில் இனி டென்ஷன் வேண்டாம் 

மொபைல்களில் 80 சதவீதம் வரை தள்ளுபடி
விற்பனையின் போது மொபைல்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. Samsung, Xiaomi, Apple மற்றும் Moto வரையிலான சாதனங்களை தள்ளுபடியில் வாங்கலாம். Realme Narzo 50A, Samsung Galaxy F12, Poco F3 GT, Moto G60, Infinix Hot 10 Play, Oppo Reno 6 5G மற்றும் Pixel 4A ஆகியவை பெரும் தள்ளுபடியில் கிடைக்கும் சில சாதனங்கள் ஆகும்.

எலக்ட்ரானிக்ஸ் & துணைக்கருவிகளுக்கு 80% வரை தள்ளுபடி
விற்பனையின் போது, ​​ரூ.89,999 விலையில் விற்பனை செய்யப்படும் acer Aspire 7 லேப்டாப் இந்த sale இல் ரூ.49,990க்கு கிடைக்கும். இதேபோல், 1,299 ரூபாய்க்கான Realme Beard Trimmer ஐ வெறும் 999 ரூபாய்க்கு வாங்கலாம். இதேபோல், பல லேப்டாப்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், புளூடூத் ஹெட்ஃபோன்கள், புளூடூத் ஸ்பீக்கர்கள், பவர் பேங்க்கள் மற்றும் டிரிம்மர்கள் போன்றவற்றை தள்ளுபடியில் வாங்கலாம்.

ALSO READ: Flipkart அசத்தும் சலுகை: வெறும் ரூ.4,999-க்கு கிடைக்கிறது சாம்சங் Smart TV 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News