Amazon Prime Day 2022: தள்ளுபடி மழை, அனைத்து பொருட்களிலும் பம்பர் சலுகைள்

Amazon Prime Day 2022: மின்னணு சாதனங்களை மிகக்குறைந்த விலையில் வாங்க காத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அமேசான் பிரைம் டே 2022 விற்பனை ஜூலை 23 முதல் தொடங்க உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 21, 2022, 12:19 PM IST
  • அமேசான் பிரைம் டே 2022 விற்பனை.
  • எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை அதிக தள்ளுபடியுடன் வாங்க ஒரு சூப்பர் வாய்ப்பு.
  • அமேசான் பிரைம் டே 2022 விற்பனை ஜூலை 23 முதல் தொடங்க உள்ளது.
Amazon Prime Day 2022: தள்ளுபடி மழை, அனைத்து பொருட்களிலும் பம்பர் சலுகைள் title=

அமேசான் பிரைம் டே 2022 விற்பனை: எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை அதிக தள்ளுபடியுடன் வாங்க ஒரு சூப்பர் வாய்ப்பு!! மின்னணு சாதனங்களை மிகக்குறைந்த விலையில் வாங்க காத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அமேசான் பிரைம் டே 2022 விற்பனை ஜூலை 23 முதல் தொடங்க உள்ளது. இந்த விற்பனையின் போது, ​​அமேசானில் மொபைல் போன்கள், அமேசான் சாதனங்கள், டிவி-கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்கும். இந்த விற்பனை 2 நாட்களுக்கு நடைபெறும். இந்த விற்பனையில் பிரைம் உறுப்பினர்களுக்கு நிறுவனத்திடமிருந்து பல சலுகைகள் வழங்கப்படும். 

நீங்களும் இந்த சலுகையைப் பயன்படுத்த விரும்பினால், உடனடியாக பிரைம் மெம்பர்ஷிப்பைப் பெற்று இந்த சலுகைகளின் பயன்களை பயன்படுத்தலாம். அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்பை எப்படி பெறுவது என்ற குழப்பம் உங்களுக்கு இருந்தால், இந்த பதிவில் அதை பற்றி தெளிவாகக் காணலாம். இந்த மெம்பர்ஷிப்பை ஏறக்குறைய இலவசமாகப் பெறக்கூடிய சில தந்திரங்களை இங்கே தெரிந்துகொள்ளலாம். 

மேலும் படிக்க | Amazon Prime Day Sale: பொருட்களை வாங்க சூப்பரான டிப்ஸ்! பணத்தை மிச்சப்படுத்துங்கள் 

1. அமேசான் மூலமாகவே பெறலாம்

இலவச பிரைம் மெம்பர்ஷிப்பிற்கு, நீங்கள் அமேசான் ப்ரைம் வீடியோவின் 30 நாட்களுக்கான இலவச ட்ரையலை பயன்படுத்த வேண்டும். இந்த வசதி முதன்முறையாக பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றாலும், இதற்கு முன் நீங்கள் அமேசான் ப்ரைமில் உறுப்பினராக இருந்திருந்தால், இலவச டிரையலின் பலனைப் பெற முடியாது. அதேசமயம் புதிதாக பதிவு செய்தால் 30 நாட்களுக்கான ஃப்ரீ டிரையலைப் பெறலாம். இலவச ட்ரையலைப் பெற்ற பிறகு, இந்த இரண்டு நாட்களின் விற்பனையையும், இதில் கிடைக்கும் சலுகைகளையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. ஏர்டெல், ஜியோ மற்றும் வோடஃபோன் ஐடியா மூலமாக 

டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல ரீசார்ஜ் பேக்குகளுடன் இலவச அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை வழங்குகின்றன. ஏர்டெல் பற்றி பேசுகையில், ரூ.349, ரூ.499, ரூ.749, ரூ.999 மற்றும் ரூ.1,599 திட்டங்களில் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை இலவசமாக வழங்குகிறது. 

ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 (போஸ்ட்பெய்டு பிளஸ்), ரூ.599, ரூ.799 (போஸ்ட்பெய்ட் பிளஸ்), ரூ.899 (போஸ்ட்பெய்டு பிளஸ்) மற்றும் ரூ.1,499 (போஸ்ட்பெய்டு பிளஸ்) திட்டங்களில் இந்த வசதியை வழங்குகிறது. 

வோடஃபோன் ஐடியா அதன் வாடிக்கையாளர்கள் ரூ.499 (போஸ்ட்பெய்டு), ரூ.699 (போஸ்ட்பெய்ட்) மற்றும் ரூ.1,099 (போஸ்ட்பெய்டு) திட்டங்களுடன் இலவச அமேசான் ப்ரைம் சந்தாவை வழங்குகிறது.

மேலும் படிக்க | ஆன்லைனில் டிவி வாங்கலாமா? இந்தியர்களுக்கான ரிப்போர்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News