வெற்றிகரமாக அமேசானின் நான்கு நாள் சிறப்பு சலுகை விற்பனை கடந்த செப்டம்பர் 24-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை 5 நாட்களுக்கு அடுத்த சிறப்பு சலுகை விற்பனை தொடங்கவுள்ளது.
ஆன்லைன் விற்பனை உலகில் தனகென ஒரு ராஜ்ஜியத்தினை கொண்டிருக்கும் அமேசான் தொடர்ந்து பல பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனைகளை வழங்கி வருகின்றது. அதன் அடிப்படையில் இந்த மாதம் இறுதியில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி மீண்டும் சிறப்பு சலுகை விற்பனையினை அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு சலுகையினில் சிட்டிபேங்க் கிரிடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10% வரை சலுகை வழங்குகிறது அமேசான். மேலும் அடுத்த வாரம் விற்பனையில் 10 கோடி ரூபாய்-க்கும் அதிமகா பொருட்களை வாங்குவோருக்கு அமேசான் சிறப்பு சலுகைகளையும் வழங்கவுள்ளது.
சோனி, சாம்சங், எல்ஜி, ஹெச்பி, ஆப்பிள் மற்றும் நோக்கியா போன்ற பிராண்டுகள் குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களுடன் இந்த விற்பனையில் களம் இரங்குகின்றன.
OnePlus, Honor மற்றும் Vivo போன்ற பல்வேறு பிராண்டு பொருட்களின் விலை ஈஎம்ஐ மற்றும் பரிமாற்ற வாய்பிலும் வழங்குகிறது அமேசான்.
கடந்த செப்டம்பர் 24-ம் தேதி முடிவடைந்த பண்டிகைகால சிறப்பு சலுகை விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பெரிய உபகரணங்கள் சிறந்த விற்பனையினை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டின் தீபாவளி விற்பனையைவிட இந்த ஆண்டு விற்பனையில் அமேசான் 2.5 மடங்கு அதிக ஸ்மார்ட் போன்கள் மற்றும் நான்கு மடங்கு அதிகமாக பெரிய சாதனங்களை விற்க முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறந்த சலுகை:-
> Lenovo K8 Note ரூ 11,999 க்கு விற்பனை விற்கப்படுகிறது. இதன் அசல் விலையிலிருந்து 2,000 ரூபாய் தள்ளுபடி.
> Moto G5 Plus 1,000 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ .15,999 விலைக்கு விற்கப்படுகிறது.
> Xiaomi Redmi 4-க்கு, ரூபாய் 1,500 வரை தள்ளுபடி இருக்கும். தொலைபேசி விற்பனைக்கு 8,499 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.