iPhone Under 21000: செகண்ட் ஹேண்ட் மொபைல்களை அதிகமானோர் ஆன்லைனில் வாங்க தொடங்கியிருக்கின்றனர். விலை உயர்ந்த மொபைல்களை வாங்கும் ஆசை கொண்டவர்கள், அதிக விலை கொடுத்த அந்த மொபைல்களை வாங்க முடியாது என்பதால், அதே மொபைல்கள் செகண்ட் ஹேண்டில் கிடைக்கும்போது விரைந்து வாங்கிக் கொள்கின்றனர். இந்த மொபைல்கள் Cashify தளத்தில் மிக குறைவான விலையில் கிடைக்கிறது.
அந்த வகையில் பண்டிகை காலத்தையொட்டி பம்பர் விலையில் ஐபோன்கள் மிக குறைந்த விலைக்கு விற்பனைக்கு கொடுக்கப்படுகின்றன. Cashify தளத்தில் இன்று முதல் புதுப்பிக்கப்பட்ட மொபைல்களுக்கான ஆஃபர் தொடங்குகிறது. ஜனவரி 15 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஆஃபரில் ஐபோன்கள் மிகப்பெரிய ஆஃபர் விலையில் கிடைக்கின்றன.
ஐபோன் ரூ.21,999க்கு கிடைக்கிறது
Cashify-ன் இணை நிறுவனர் நகுல் குமார் கூறுகையில், “பிரீமியம் ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம். மக்கள் மிகக் குறைந்த விலையில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் குறைந்த விலையில் ஐபோன் வாங்க விரும்பினால், Cashify சரியான இடம். ஆப்பிள் ஐபோனை ரூ.21,999-க்கு வாங்கலாம்" என்றார்.
மேலும் படிக்க | BSNL முக்கிய தகவல்: இந்த நாளில் துவங்கும் 4ஜி சேவை
iPhone X ரூ.21,999-க்கு கிடைக்கிறது
ஐபோன் தவிர சாம்சங், சியோமி உள்ளிட்ட பல நிறுவனங்களின் பிரிமியம் ஸ்மார்ட்போன்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. iPhone 12 Pro Max ஐ 67,999 ரூபாய்க்கும், iPhone 11 ஐ 29,499 ரூபாய்க்கும், iPhone X 21,999 ரூபாய்க்கும் தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
சாம்சங் போன்களிலும் தள்ளுபடி
Samsung S21 Plus 5G-ன் ஆரம்ப விலை ரூ.35,999. சியோமி நோட் 9 சீரிஸிலும் பம்பர் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, இன்னும் சில நாட்களில் தொடங்கவிருக்கும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் குடியரசு தின விற்பனைக்காக நீங்கள் காத்திருக்கலாம். இங்கு ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும்.
செகண்ட் ஹேண்ட் மொபைல்கள்
புதுப்பிக்கப்பட்டதாகக் குறிக்கப்பட்ட தயாரிப்புகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, தரவை அகற்றிய பிறகு, பழுதுபார்ப்பு தேவைப்பட்டால், அதுவும் செய்யப்படுகிறது. பின்னர் அந்த தயாரிப்பு மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் பேக்கேஜ் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | ஆபர்களை அள்ளி தரும் ஜியோ...336 நாட்கள் வேலிடிட்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ