ஆப்பிள் நிறுவனம் பெரிய திரையுடன் கூடிய மலிவான 5G ஐபோனைக் கொண்டு வருகிறது. ஆப்பிள் ஐபோன் எஸ்இ 4-ன் வடிவமைப்பு ஐபோன் எக்ஸ்ஆரைப் போலவே இருக்கும் என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இருப்பினும், ஐபோன் SE 4-ன் ஸ்கிரீன் அளவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என ஆப்பிள் தெரிவித்துள்ளது. iPhone SE 4க்கு வெவ்வேறு ஸ்கிரீன் அளவுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஐபோன் எஸ்இ 4-ன் பின்புறத்தில் கேமரா
தற்போதைய iPhone SE ஆனது LCD பேனலுடன் பொருத்தப்பட்டுள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி, iPhone SE 4-ன் வடிவமைப்பு 2018-ல் மீண்டும் அறிமுகமான iPhone XR ஐப் போலவே இருக்கும். எனவே, இதன் முன்புறத்தில் நாட்ச் டிஸ்ப்ளே மற்றும் பின்புறத்தில் கேமராவுடன் எல்இடி ப்ளாஷ் பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன் எக்ஸ்ஆர் 6.1 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருந்தது.
மேலும் படிக்க | Mi Clearance Sale: ரூ.4,000-க்கும் குறைவான விலையில் அசத்தல் ரெட்மி போன்!!
iPhone SE 4 காட்சி
ஐபோன் SE 4-க்கு, ஆப்பிள் இரண்டு சப்ளையர்களிடமிருந்து 5.7-இன்ச் முதல் 6.1-இன்ச் எல்சிடி பேனல்கள் மற்றும் இரண்டு சப்ளையர்களிடமிருந்து 6.1-இன்ச் ஓஎல்இடி பேனல்களைப் ஆர்டர் செய்திருக்கிறது. எனவே, iPhone SE 4 ஆனது OLED அல்லது LCD தொழில்நுட்பத்துடன் கூடிய 5.7 இன்ச் அல்லது 6.1 இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஐபோன் எஸ்இ 4 லைட்னிங் போர்ட்டு
ஐபோன் SE 4 ஒரு பக்கவாட்டு கைரேகை ஸ்கேனர் கொண்ட நிறுவனத்தின் முதல் தொலைபேசியாக இருக்கலாம். நான்காவது தலைமுறை iPhone SE ஆனது Apple A15 அல்லது சமீபத்திய A16 Bionic சிப் உடன் பொருத்தப்பட்டிருக்கலாம். தற்போதைய iPhone SE போன்று, ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் வரலாம். iPhone SE 4, 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | BSNL பயனார்களே..அருமையான 2 பிளான்கள்; உடனே ரீசார்ஜ் செய்யுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ