ஏர்டெல் தனது AGR நிலுவைத் தொகையின் ஒரு பகுதியாக ₹.10,000 கோடியை செலுத்தியது!!

மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயில், பத்தாயிரம் கோடி ரூபாயை இன்று செலுத்திவிட்டதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.!!

Last Updated : Feb 17, 2020, 01:37 PM IST
ஏர்டெல் தனது AGR நிலுவைத் தொகையின் ஒரு பகுதியாக ₹.10,000 கோடியை செலுத்தியது!! title=

மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயில், பத்தாயிரம் கோடி ரூபாயை இன்று செலுத்திவிட்டதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.!!

டெல்லி: மத்திய அரசு விதித்த காலக்கெடு மீது உச்ச நீதிமன்றம் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், தொலைத்தொடர்புத் துறைக்கு ரூ .10,000 கோடி சட்டரீதியான நிலுவைத் தொகையை பாரதி ஏர்டெல் திங்கள்கிழமை செலுத்தியது. சுய மதிப்பீட்டுப் பணிகளுக்குப் பிறகு மீதமுள்ள தொகையை செலுத்துவதாக பாரதி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாரதி ஏர்டெல், பாரதி ஹெக்ஸகாம் மற்றும் டெலினார் சார்பாக மொத்தம் ரூ.10,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சுய மதிப்பீட்டுக் கணக்கை விரைவாக முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், உச்ச நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை தேதிக்கு முன்னர் அல்லது விசாரணை முடிந்தவுடன் மீதமுள்ள நிலுவைத் தொகையை முறையாகச் செலுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று பாரதி ஏர்டெல் தெரிவித்துள்ளது. 

நிலுவைத் தொகையைச் செலுத்தும் போது இதர விவரங்களையும் சமர்ப்பிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு பிப்ரவரி 14 ஆம் தேதி தொலைத்தொடர்புத்துறை, பாரதி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கும் பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டதில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்கொண்ட பின்னர், பகுதி வாரியாக அனைத்து நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் ரூ. 10,000 கோடி மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை மார்ச் 17ஆம் தேதிக்குள் செலுத்துவதாக ஏர்டெல் பதிலளித்திருந்தது. உரிமக் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைப் பயன்பாட்டுக் கட்டணம் உள்பட கிட்டத்தட்ட ரூ.35,586 கோடி நிலுவைத் தொகையை பாரதி ஏர்டெல் அரசுக்கு பாக்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News