இந்த சிம்கார்டுகளை இனி பயன்படுத்த முடியாது..!

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வழிமுறைகளின்படி சில சிம் கார்டுகளை இன்று முதல் பயன்படுத்த முடியாது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 20, 2022, 05:00 PM IST
 இந்த சிம்கார்டுகளை இனி பயன்படுத்த முடியாது..! title=

மொபைல்போன் பயன்படுத்துபவர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று ஒன்று உள்ளது. அது என்னவென்றால், சில சிம்கார்டுகளை நீங்கள் இன்று முதல் பயன்படுத்த முடியாது. ஆனால், அதற்கான அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டதா? என்றால் இல்லை. கடந்த ஆண்டு டிசம்பர் 7, 2021 அன்று தொலைத்தொடர்புத் துறையால் ஒரு உத்தரவு வெளியிடப்பட்டது. அதில் அதிக சிம் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு ஒரு கண்டிஷனை மத்திய அரசு விதித்திருந்தது. அதன்படி 9க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வைத்திருப்பவர்கள், உரிய ஆவணங்களுடன் சிம் கார்டு வேலிடேஷன் செய்யுமாறு தெரிவித்திருந்தது.

ALSO READ | 35 ஆயிரம் Vivo 5G போனை வெறும் ரூ.799க்கு வாங்க செம வாய்ப்பு

இதற்காக 45 நாட்கள் கால அவகாசமும் மத்திய அரசு கொடுத்திருந்தது. அதன்படி, அந்தக் காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. 9 சிம்கார்டுகளுக்கும் மேல் உள்ளவர்கள் முறையாக வேலிடேஷன் செய்யாமல் இருக்கும்பட்சத்தில் அந்த சிம்கார்டுகளுக்கான அவுட்கோயிங் கால்கள் இன்று முதல் நிறுத்தப்படும். அதுமட்டுமில்லாமல் இன்கம்மிங் கால்களும் வராது. 

ALSO READ | இவ்வளவு கம்மியா? மலிவான திட்டங்களை ரகசியமாக அறிமுகம் செய்தது BSNL

இந்தியாவில் யாரெல்லாம் 9 சிம்கார்டுகள் வைத்திருக்க அனுமதி என்றால், இந்திய குடிமகனாக இருக்கும் அனைவரும் 9 சிம்கார்டுகளை வைத்திருக்கலாம். அதேநேரத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விலக்கு பொருந்தாது. அவர்கள் அதிகபட்சம் 6 சிம்கார்டுகளை மட்டுமே வைத்திருக்க முடியும். மேலும், ஒரே ஆவணத்தின் கீழ் யாரும் 9 சிம் கார்டுகளை வைத்திருக்க முடியாது. அவ்வாறு 9 சிம்காடுகள் இருந்தால் அவை சட்டவிரோதமாகவும் கருத்தப்படும். ஆன்லைன் மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களை தவிர்க்கும் பொருட்டு மத்திய தகவல் ஒளிரப்பரப்பு துறை அமைச்சகம் இந்த புதிய விதிமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News