Flipkart Offer: 5000 ரூபாய்க்கும் கீழ் கிடைக்கிறது வாஷிங் மேஷின்... அதுவும் இத்தனை வசதிகளுடன்!

Flipkart Best Washing Machine Offer: செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினை வேறு எங்கும் கிடைக்காத விலையில், அதாவது ரூ. 5000-க்கும் கீழ் விலையில் ஃபிளிப்கார்டில் கிடைக்கும்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 8, 2023, 08:39 PM IST
  • ரூ. 8000 முதல் ரூ. 9000 வரை செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் கிடைக்கிறது.
  • இந்த மெஷின் 5 ஸ்டார் ரேட்டிங்கில் கிடைக்கிறது.
  • இதில் 1350 RPM ட்ரையர் ஸ்பின் வேகம் கிடைக்கிறது.
Flipkart Offer: 5000 ரூபாய்க்கும் கீழ் கிடைக்கிறது வாஷிங் மேஷின்... அதுவும் இத்தனை வசதிகளுடன்! title=

Flipkart Best Washing Machine Offer: இப்போதெல்லாம் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினின் பயன்பாட்டையும், இடத்தையும் ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் ஆக்கிரமித்துவிட்டது எனலாம். குறிப்பாக, ஒரு ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினை இயக்குவது என்பது பிற வாஷிங் மெஷினை காட்டிலும் மிகவும் எளிதானது. ஏனென்றால் நீங்கள் ஒரு முறை அதனை இயக்கினால், அதன் பிறகு சலவை இயந்திரம் துணிகளை சுத்தம் செய்து உலர்த்தும் வரை நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை என்றாகிவிடுகிறது.

செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மிஷினை விட ஆட்டோமேட்டிக் வாஷிங் மிஷின் விலை சற்று அதிகம் என்றாலும், அதன் பராமரிப்பும் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினை விட விலை அதிகம். இதனால், தான் இன்றும் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டு மக்கள் அதனை வாங்க பிரியப்படுகிறார்கள். இதுமட்டுமின்றி, செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் மிகவும் வலுவாக உள்ளது. 

5 ஸ்டார் ரேட்டிங்

மேலும் இது பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிறப்பாகவும் செயல்படுகிறது. நீங்கள் அதை வாங்குவதற்கு சுமார் ரூ. 8000 முதல் ரூ. 9000 வரை செலவழித்தால் போதுமானது. ஆனால் இப்போது ஃபிளிப்கார்ட் ஒரு செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினை ரூ. 5000-க்கும் குறைவாக வாங்கிக்கொள்ளும் அளவுக்கு ஒரு ஆஃப்பரை வழங்கியுள்ளது. 

மேலும் படிக்க | Hyundai Exter CNG vs Tata Punch CNG: உங்களுக்கு ஏற்ற கார் எது?

அந்த வகையில், ஃபிளிப்கார்ட் ஆஃப்பரில் வழங்கும் ஜாஸ் வாஷிங் மெஷின் குறித்து இங்கு காணலாம். இது 7 கிலோ எடையுள்ள 5 ஸ்டார் ரேட்டிங் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் ஆகும். இது ஃபிளிப்கார்ட் நிறுவனத்தால் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாஷிங் மெஷின் 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது, அதாவது இங்கு மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். 

செமி ஆட்டோமேட்டிக் என்பதால், அதில் டைமிங் ரெகுலேட்டரையும், வலுவான வடிவமைப்பையும் பெறுவீர்கள். இந்த வாஷிங் மெஷின் மிகவும் வலுவாக உள்ளது மேலும் இதில் சில சக்திவாய்ந்த அம்சங்களையும் இதில் காணலாம். இதில் 1350 RPM ட்ரையர் ஸ்பின் வேகம் கிடைக்கிறது. வேகம் காரணமாக, இது மிகவும் சக்திவாய்ந்த முறையில் துணிகளை உலர்த்தும்.

எக்ஸ்சேஞ்ச் ஆஃப்பர்

இந்த வாஷிங் மெஷினின் விலையை பார்த்தோமானால், வாடிக்கையாளர்கள் இந்த வாஷிங் மெஷினை 36% தள்ளுபடியுடன் 6990-க்கு மட்டுமே வாங்க முடியும். ஆனால் வாடிக்கையாளர்கள் இந்த விலையை அதிகமாகப் பார்க்கிறார்கள் என்றால், இப்போது ஃபிளிப்கார்ட் இதற்கும் ஒரு தீர்வைக் கொடுத்துள்ளது. குறிப்பாக, வாடிக்கையாளர்கள் இந்த வாஷிங் மெஷினை 4790க்கு பெரும் தள்ளுபடியுடன் வாங்க முடியும். ஏனெனில் இந்த வாஷிங் மெஷின் மீது ரூ.2200 எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது, இது அதன் விலையை கணிசமாகக் குறைக்கிறது மற்றும் வாடிக்கையாளர்கள் மலிவு விலையில் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

மேலும் படிக்க | Most Affordable Electric Cars: மிக குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 மின்சார கார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News