Video: Android நிறுவனத்தின் அடுத்தப் படைப்பு Android 9 Pie!

இணையத் தேடல் ஜாம்பவான் கூகிள் தனது புதிய இயக்கு தளமான (Operating System) Android 9 Pie-னை வெளியிட்டுள்ளது!

Written by - Mukesh M | Last Updated : Aug 7, 2018, 01:45 PM IST
Video: Android நிறுவனத்தின் அடுத்தப் படைப்பு Android 9 Pie! title=

இணையத் தேடல் ஜாம்பவான் கூகிள் தனது புதிய இயக்கு தளமான (Operating System) Android 9 Pie-னை வெளியிட்டுள்ளது!

Android இயங்குதளத்தின் அடுத்த தலைமுறையாள Android P எனப்படும் Android 9 Pie இயங்குதளத்தினை திங்களன்று கூகிள் நிறுவனம் வெளியிட்டடுள்ளது. Google Pixel மொபைல்களில் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த Android P இயங்குதளம் தற்போது Android 9 Pie என்னும் பெயரில் Sony Mobile, Xiaomi, HMD Global, Oppo, Vivo, OnePlus ஆகிய மொபைல்களுக்கு உறுவாக்கப்பட்டுள்ளது.

ஆங்கில எழுத்துகளின் அகர வரிசையில் தனது இயங்குதளத்திற்கு பெயர் வைத்து வரும் Android நிறுவனம் தற்போது P வரிசையினை எட்டியுள்ளது. இதற்கு முன்னதாக Oreo, Nougat, Marshmallow, Lollipop என பெயர் வைத்து வந்த நிலையில் தற்போது P வரிசையில் Pie-னை அறிமுகம் செய்துள்ளது.

இந்த Android 9 Pie ஆனது மொபைல்களில் பேட்டரி திறைனை சேமிக்கும் வகையில் திரைக்கு பின் வீனாகும் நீட்சி திறனை மீட்டெடுக்கும் வேலைகளுக்காக உறுவாக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Android 9 Pie-ன் சில குறிப்பிடதக்க சிறப்பம்சங்கள்...

  • இரண்டு மடங்கு வேகம்: முந்தைய பதிப்புகளை விட இரண்டு மடங்கு வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  • பின்னணி வரம்புகள்: Android 9 Pie-ல் பயன்பாடுகளின்(apps) பின்னணி நடவடிக்கைகளை குறைக்கபடுகிறது.
  • தானியங்கு நிரப்புதல்: உங்கள் அனுமதியுடன், சூப்பர்ஃபைல் உங்கள் உள்நுழைவுகளை உன்னதமான வேகத்தில் உங்களுக்குப் பிடித்த பயன்பாடுகளில் பெறுகிறது.
  • படத்தில் உள்ள படம்: இது ஒரே நேரத்தில் இரண்டு பயன்பாடுகளைக் காண அனுமதிக்கிறது. உதாரணமாக, நீங்கள் யூடுப் -இல் ஒரு வீடியோவைக் பார்க்கும்போது, மின்னஞ்சலுக்கு ஒன்றிற்கு அதே நேரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றால், Android 9 Pie அதற்கு வாய்ப்பு வழங்குகிறது.
  • அண்ட்ராய்டு நோட்டிபிகேசன்ஸ்: உங்கள் உலாவியில் இருந்து நேரடியாக புதிய பயன்பாடுகளில் நேரடியாகப் டெலிபோர்ட் உதவியில் மாற்றலாம்.
  • நகலெடுக்கவும்: Android 9 Pie நகலெடுத்தல் வேலைகளை எளிதாக்குகிறது. எந்த பகுதியாக இருந்தாலும் அதனை நீண்ட நேரம் அழுத்தி அல்லது இருமுறை தட்டவதன் மூலம் எளிதில் நகலெடுக்க முடியும்.
  • கூகிள் ப்ளே பாதுகாப்பு: உங்கள் மொபைல் தரவையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.
  • Wi-Fi உதவியாளர்: தொலைபேசியை ஒரு உயர் தரமான திறந்த Wi-Fi உடன் இணைக்கிறது, மேலும் பயனர்கள் தங்களது தனி கூட்டமைப்பினை உறுவாக்க உதவுகிறது.

Trending News