Game, App-ஐ தவறாக வாங்கிவிட்டால் கவலை வேண்டாம்: Google Play Store refund அளிக்கும்

பணத்தைத் திரும்பப் பெறும் கொள்கைகளைப் பொறுத்து, Google Play-வில் நாம் வாங்கிய சிலவற்றிற்கு Google பணத்தைத் திரும்பத் தருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2020, 03:35 PM IST
  • Google Play Store-ரிலும் உள்ளது ரீஃபண்டு ஆப்ஷன்.
  • Google Play Store-ல் கேம்கள் அல்லது அடிப்படை செயலிகளில் நீங்கள் ரீஃபண்ட் பெறலாம்.
  • இதற்கான சில நிபந்தனைகள் உள்ளன.
Game, App-ஐ தவறாக வாங்கிவிட்டால் கவலை வேண்டாம்: Google Play Store refund அளிக்கும் title=

புதுடெல்லி: தவறான ஆடை அல்லது ஆபரனங்களை வாங்கி விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதை அளித்து மீண்டும் பணத்தைத் திரும்பப் பெறவோ அல்லது அதற்கு பதில் சரியான பொருளையோ வாங்க விரும்புகிறீர்கள். கூகிள் பிளே ஸ்டோரில் வாங்கிய பல செயலிகள் மற்றும் கேம்களிலும் இதே போன்ற செயல்முறையை செய்யலாம்.

பணத்தைத் திரும்பப் பெறும் கொள்கைகளைப் பொறுத்து, Google Play-வில் நாம் வாங்கிய சிலவற்றிற்கு Google பணத்தைத் திரும்பத் தருகிறது. உங்கள் கணக்கைப் பயன்படுத்தி ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் தற்செயலாக எதையாவது வாங்கியிருந்தால், Google Play இணையதளத்தில் பணத்தைத் திரும்பக் கோறலாம்.

உங்கள் கார்டில் அல்லது நீங்கள் செய்யாத பிற கட்டண முறைகளில் Google Play மூலம் ஏதாவது வாங்கப்பட்டிருப்பதை நீங்கள் கண்டால், அதை யார் வாங்கியது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால், பரிவர்த்தனை நடந்த 120 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்படாத கட்டணங்களைப் பற்றிய புகாரை நீங்கள் அளிக்கலாம்.

ALSO READ: உங்கள் WhatsAppஐ யாராவது அணுகிறார்களா? தவிர்க்க Tricks & Tips

Google Play Store-ல் கேம்கள் அல்லது அடிப்படை செயலிகளில் நீங்கள் ரீஃபண்ட் பெற வேண்டுமானால், பின்வரும் நடைமுறையைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் தவறான ஒன்றை வாங்கியதாக நினைத்தால், 48 மணி நேரத்திற்குள் Play Store-க்கு செல்லவும்.

‘Refund’ பட்டனைக் கிளிக் செய்யவும்.

வழக்கமாக பணத்தைத் திரும்பப் பெற, ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு இது செயல்பட 15 நிமிடங்கள் ஆகும். ஆனால் சில நேரங்களில் அது 4 மணிநேரம் வரை கூட எடுக்கலாம்.

கூகிள் (Google) அதன் சப்போர்ட் பேஜில், இசை, திரைப்படங்கள், புத்தகங்கள் அல்லது பிற உள்ளடக்கங்களை நீங்கள் வாங்கியிருந்தால், 48 மணி நேரத்திற்கும் மேலாக பணத்தைத் திரும்பப்பெற கோரிக்கை விடுக்கலாம் என கூறியுள்ளது.

நீங்கள் வாங்கியதைப் பொறுத்து கூகிளின் ரீஃபண்ட் கொள்கைகள் வேறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

"கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்த செயலியை முதலில் வாங்கிய சிறிது நேரத்திலேயே நீக்கினால், நீங்கள் தானாக பணத்தைத் திரும்பப் பெறலாம். நீங்கள் செயலியை மீண்டும் நிறுவ விரும்பினால், அதை மீண்டும் வாங்க வேண்டியிருக்கும். ஆனால் அப்போது உங்களுக்கு ரீஃபண்ட் (Refund) கிடைக்க வாய்ப்பில்லாமல் போகலாம்” என்று கூகிள் குறியுள்ளது.

இருப்பினும், நீங்கள் உங்கள் கணக்கு அல்லது கட்டண விவரங்களை வேறொருவருக்குக் கொடுத்து, அவர் கொள்கைகளை தவறாகப் பயன்படுத்துவதாகவோ அல்லது உங்கள் கணக்கை அங்கீகாரத்துடன் பாதுகாக்கவில்லை என்று தோன்றினாலோ, வழக்கமாக பணம் திரும்ப அளிக்கப்படுவதில்லை.

எனினும் நேர்மையான முறையில் Google Play Store-ல் வாங்கிய பல பொருட்களுக்கும் நமக்கு ரீஃபண்டு ஆப்ஷன் கிடைக்கிறது. 

ALSO READ: Tech News: 2021-ல் வருகின்றன OnePlus-ன் இரண்டு புதிய ஃபோன்கள்: முழு விவரம் உள்ளே

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News