இன்றைய சூழலில் பிரபலமான தகவல் தொடர்பு தளமாக வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது, இதில் மக்கள் நண்பர்கள், உறவினர்கள், பணிபுரிபவர்கள் என அனைவருடனும் உரையாடுகின்றனர். இது பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதால் அனைவரும் இதனை விரும்பி பயன்படுத்துகின்றனர். வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்களோ இல்லையோ தவறாமல் பலரும் வாட்ஸ்அப்பில் கணக்கு வைத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | Tips and Tricks: குறைந்த செலவில் வாட்ஸ்அப் அழைப்பை செய்ய சுலபமான வழி
போனில் நாம் பயன்படுத்தும் வாட்சப்பை விட, டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பின் பிரவுசர் விண்டோக்களில் பொருத்தப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் வெப் சிறிது சிரமமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இதனை நாம் பயன்படுத்தும்போது அருகில் உள்ளவர்கள் நம்முடைய தகவல்களை பார்க்கக்கூடும், இது நம்முடைய ப்ரைவசியை பாதிப்பதாக அமைத்திருக்கிறது. கூகுள் குரோம் வழங்கும் 'WA Web Plus for WhatsApp' மூலம் டெலீட் செய்த மெசேஜ்களை திரும்ப பெறவும், ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைக்கவும், ரீட் ரெசிப்ட்ஸ்களை படிக்கவும், மங்கலான நிலையில் கான்டெக்ட்டுகள், ப்ரொபைல் போட்டோக்கள் மற்றும் மெசேஜ்களை வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
இந்த 'WA Web Plus for WhatsApp' ஆனது வாட்ஸ்அப்பால் அங்கீகரிக்கப்படவில்லை, இது ஒரு மூன்றாம் தரப்புக் கருவி. இதுபோன்ற மூன்றாம் தரப்பு கருவிகளுடன் உங்கள் வாட்சப்பை பகிர விரும்பவில்லை என்றால் தொடர வேண்டாம். இதனை பயன்படுத்த விரும்புபவர்கள் செய்யவேண்டியது என்னவென்றால், முதலில் குரோமிற்கு செல்ல வேண்டும். அதில் 'WA Web Plus for WhatsApp' என்பதை தேட வேண்டும், அந்த எக்ஸ்டென்க்ஷனை கண்டறிந்ததும் அதில் வலது புறத்திலுள்ள 'Add to Chrome' என்பதை க்ளிக் செய்யவேண்டும்.
இந்த எக்சிடென்க்ஷனை நிறுவியதும், நீங்கள் விரும்பும் அம்சத்தை பயன்படுத்த எக்ஸ்டென்சன் பக்கத்தை தேர்வு செய்யவேண்டும். அதில் யுஆர்எல் பாரில் வலது புறத்தில் ஜிக்சா பசில் போன்று வடிவமைக்கப்படும். அதில் 'WA Web Plus for WhatsApp' ஐக்கானை கிளிக் செய்யவும், பின்னர் செட்டிங் பக்கம் திறந்ததும், 'பிரைவசி' மற்றும் 'கஸ்டமைசேஷன்' போன்ற ஆப்ஷன்கள் தோன்றும். இதில் சில அம்சங்களுக்கு பணம் செலுத்தவேண்டும், இருப்பினும் டெலீட் மெசேஜ்களை திரும்ப பெறுதல், ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைத்தல் போன்றவற்றை இலவசமாக இயக்கிகொள்ளலாம். இதன் மூலம் பிரவுசரில் வாட்ஸ்அப் வெப் திறக்கும் போது உங்களின் புதிய அம்சங்கள் இருக்கும், அப்போது யாராவது உங்களுக்கு ஒரு மெசேஜை அனுப்பி அதை டெலீட் செய்தால் அதனை உங்களால் பார்க்க முடியும்.
மேலும் படிக்க | இனி வாய்ஸ் மூலம் கூகுள் பேவில் பேமண்ட் செய்யலாம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR