பாதி விலையில் வாஷிங் மிஷின், ஸ்மார்ட் டிவி... பிளிப்கார்ட்டின் டக்கர் தள்ளுபடி!

Flipkart Big Dussera Sales 2023: பிளிப்கார்ட் பிக் தசரா தள்ளுபடி விற்பனையில் சிறப்பான வாஷிங் மெஷின் மற்றும் ஸ்மார்ட் டிவி அதன் பாதி விலையில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி குறித்து இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 23, 2023, 12:49 PM IST
  • பலரும் தீபாவளிக்கு வீட்டில் புதிய பொருள்களை வாங்க திட்டமிடுவார்கள்.
  • பிக் தசரா விற்பனை நேற்று தொடங்கியது.
  • வரும் அக். 29ஆம் தேதி வரை இந்த விற்பனை நடக்கும்.
பாதி விலையில் வாஷிங் மிஷின், ஸ்மார்ட் டிவி... பிளிப்கார்ட்டின் டக்கர் தள்ளுபடி! title=

Flipkart Big Dussera Sales 2023: பிளிப்கார்ட் தனது பிக் பில்லியன் டேஸ் தள்ளுபடி விற்பனையை கடந்த அக். 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடத்தியது. ஸ்மார்ட்போன்கள் முதல் பல சாதனங்கள் அதில் தள்ளுபடியில் கிடைத்தது. தற்போது அதேபோல், இந்தியா முழுவதும் தசரா பண்டிகை கொண்டாடப்படும் வேளையில் பிளிப்கார்ட் அதற்கும் பிரத்யேக தள்ளுபடி விற்பனையை தொடங்கி உள்ளது. 

பிளிப்கார்ட்டின் பிக் தசரா சேல் நேற்று தொடங்கியது. மேலும், இந்த தள்ளுபடி விற்பனை அக். 29ஆம் தேதி வரை இருக்கும். எனவே, பிக் பில்லியன் டேஸை தவறவிட்ட வாடிக்கையாளர்கள் இந்த தள்ளுபடி விற்பனையை பயன்படுத்தி, வீட்டுக்கு தேவையான உபகரணங்கள் முதல் எலெக்ட்ரிக் சாதனங்கள் வரை பல பொருள்களை பாதி விலையில் வாங்கிக்கொள்ளுங்கள். 

அந்த வகையில் வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் உங்கள் வீட்டு உபயோகப் பொருட்களை நீங்கள் புதுப்பிக்க விரும்பினால், இந்த விற்பனை உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இந்த விற்பனையில் பொருள்களை பெற, நீங்கள் பிளிப்கார்ட் தளத்திற்கு சென்று உங்களுக்குப் பிடித்த தயாரிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விற்பனையில் கிடைக்கும் வீட்டு உபயோகம் சார்ந்த சிறந்த சாதனங்களை இதில் காணலாம்.

மேலும் படிக்க | 150 இன்ச் 4K டிவி வந்திருக்கு, வைக்க வீட்டில் இடமிருக்கா? டால்பி அட்மோஸ் சவுண்ட் காதை கிழிக்கும்

வாஷிங் மெஷின்

பிளிப்கார்ட்டின் பிக் தசரா விற்பனையில், Realme நிறுவனத்தின் Techlife 8.5 Kg வாஷிங் மிஷினை நீங்கள் தள்ளுபடி விலையில் வாங்கலாம். அதாவது, 5 ஸ்டார் ரேட்டிங் உள்ள இந்த வாஷிங் மிஷினை நீங்கள் பாதி விலையில் வாங்கலாம். இதன் அசல் விலை 18 ஆயிரத்து 990 ரூபாய் ஆகும். ஆனால், இந்த தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் இதனை 9 ஆயிரத்து 490 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த வாஷிங் மெஷின் சிறப்பம்சங்களைப் பற்றி பார்த்தால், இது செமி ஆட்டோமேடிக் டாப் லோட் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும், இந்த வாஷிங் மெஷின் எளிதாக துணிகளை உலர்த்துகிறது மற்றும் உப்பு தண்ணீரிலும் எளிதான சலவையை மேற்கொள்ளும் அம்சங்கள் இந்த வாஷிங் மெஷினில் காணப்படுகின்றன.

ஸ்மார்ட் டிவி

வீட்டில் இருக்கும் டிவியை மாற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு இதுவே சிறந்த தருணம். இந்த பிளிப்கார்ட் பிக் தசாரா தள்ளுபடி விற்பனையில் SAMSUNG Crystal 4K iSmart ஸ்மார்ட் டிவியை நீங்கள் வாங்கலாம். Flipkart இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியில் 46 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. இந்த டிவியின் அசல் விலை 52 ஆயிரத்து 900 ரூபாய் ஆகும். தள்ளுபடியில் இது 28 ஆயிரத்து 490 ரூபாய் மட்டுமே. இந்த எல்இடி டிவியில், வாடிக்கையாளர்கள் வீடியோ அழைப்பு, கிரிஸ்டல் பிராசஸர் 4K உடன் 20 வாட்ஸ் ஒலி வெளியீடு ஆகியவற்றைப் பெறுகிறார்கள். மேலும், இது 43 இன்ச் தொலைக்காட்சியாகும்.

மேலும் படிக்க | Old TV to Smart TV : வீட்டில் கிடக்கும் பழைய டிவி ஸ்மார்ட் டிவியாக மாறும் - வெறும் 2000 ரூபாய் போதும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News