Vodafone Idea OTT Benefits: இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் தொலைதொடர்பு துறையில் இயங்கி வருகின்றன. முன்னொரு காலத்தில் பல நிறுவனங்கள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது இவை மட்டும் நிலைத்திருக்கின்றன. அதிலும் பிஎஸ்என்ல் நிறுவனத்தில் தற்போதுதான் 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் இன்னும் 5ஜி சேவையை தொடங்காத நிலையில், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்கி வருகிறது.
5ஜி சேவையை ஜியோ மற்றும் ஏர்டெல் வரம்பற்ற வகையில் வழங்கி வருகிறது. கூடிய விரைவில் 5ஜி சேவைக்கு ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அடுத்த வருடம் 6ஜி இணைய சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தளவிற்கு இணைய சேவை என்பது இந்தியாவில் இன்றியமையாததாக மாறிவிட்டது.
ஓடிடி உடன் ரீசார்ஜ் பிளான்கள்
ஸ்மார்ட்போனுக்கான பிரீபெய்ட், போஸ்ட்பெய்ட் சேவைகள் மட்டுமின்றி வயர்லெஸ் இணைய சேவை உள்ளிட்ட சேவையையும் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் நிலவும் கடும் போட்டியால் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் ஆகியவை மாறி மாறி போட்டிப் போட்டுக்கொண்டு பல சலுகைகளுடன் ரீசார்ஜ் பிளான்களை வழக்கத்தில் வைத்துள்ளன.
மேலும் படிக்க | ஜியோவின் 56 ஜிபி இலவச 5ஜி டேட்டாவை எப்படி பெறுவது? வோடோஃபோன் ஐடியாவுக்கு செம போட்டி
அதில் முக்கிய விஷயம் ஓடிடி சந்தாவையும் ரீசார்ஜ் திட்டங்களுடன் பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடிகளை பல ரீசார்ஜ் திட்டங்கள் இலவசமாக வழங்குகின்றன. தனியாக ஓடிடி சந்தாவை பெறுவதை விட இதுபோன்ற ரீசார்ஜ் திட்டங்களை பயனர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
ரூ.169 ரீசார்ஜ் பிளான்
அந்த வகையில், வோடபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் பல புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தியது. இந்த பிளானில் டேட்டா பலன்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு சார்ந்த பலன்களையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். வோடபோன் வழங்கும் இந்த குறிப்பிட்ட ரீசார்ஜ் பிளானில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி இலவசமாக வழங்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.169 என்ற விலையில் ரீசார்ஜ் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாள்கள் ஆகும். இதில் டேட்டா பலன், ஓடிடி சந்தா ஆகியவை ஒரு மாதத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் பிளானில் மொத்தம் 8ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் ஓடிடி இலவசமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக, ஹாட்ஸ்டார் 90 நாள்களுக்கு சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் காலிங் மற்றும் எஸ்எம்எஸ் பலன்கள் இருக்காது.
இதில் உங்களுக்கு காலிங் மற்றும் எஸ்எம்எஸ் பலன்கள் வேண்டுமென்றால் ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த ரீசார்ஜ் திட்டத்திற்கு 24 நாள்கள் வேலிடிட்டி ஆகும். இதில் ஒரு மாதத்திற்கு 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் வரம்பற்ற காலிங் வசதி உள்ளது. 300 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டாம்.. BSNL அசத்தல் திட்டம் அறிமுகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ