Tips and Tricks:இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்புகளை திட்டமிடும் வழிமுறை

இன்ஸ்டாகிராமில், தன்னை பின்தொடர்பவர்களுக்கு நேரலை அமர்வு தகவலை முன்கூட்டியே வழங்குவது எப்படி என்பது பலருக்கு தெரியவில்லை. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 12, 2022, 12:52 PM IST
  • இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்பு
  • நேரடி ஒளிபரப்புகளை எவ்வாறு திட்டமிடுவது
Tips and Tricks:இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்புகளை திட்டமிடும் வழிமுறை title=

இன்ஸ்டாகிராமில், தன்னை பின்தொடர்பவர்களுக்கு நேரலை அமர்வு தகவலை முன்கூட்டியே வழங்குவது எப்படி என்பது பலருக்கு தெரியவில்லை. 

இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்பைத் திட்டமிடுவதன் மூலம், படைப்பாளிகள் தங்களைப் பின்தொடர்பவர்களுடன் வரவிருக்கும் நேரலை அமர்வுகள் பற்றிய தகவல்களைப் பகிரலாம். அதை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்.

சமூக ஊடகங்களில்  (Social Media) பிரபலமான Instagram சில காலத்திற்கு முன்பு 2 புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது. நேரடி செயல்பாட்டைப் பயன்படுத்தும் படைப்பாளர்களுக்கு இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

இந்த அம்சங்களில் ஒன்று படைப்பாளர்கள் தங்கள் நேரலை அமர்வுகளை 90 நாட்களுக்கு முன்பே திட்டமிட அனுமதிக்கிறது. இது அவரைப் பின்தொடர்பவர்களிடையே ஆர்வத்தை அதிகரிக்கும், மேலும் நேரடி அமர்வுக்காக காத்திருப்பு அனுபவம், வித்தியாசமானதாக இருக்கும்.

மேலும் படிக்க | நடிகை காயத்திரியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது

லைவ் பிராட்காஸ்ட் மூலம், படைப்பாளிகள் இப்போது தங்களைப் பின்தொடர்பவர்களுக்கு அவர்களின் நேரலை அமர்வுகளைப் பற்றி முன்கூட்டியே தெரிவிக்கலாம். இதன் மூலம், படைப்பாளிகளின் வரவிருக்கும் நேரலை அமர்வுகளைப் பற்றி பயனர்கள் ஏற்கனவே நிறைய அறிந்திருப்பார்கள். 

நீங்களும் ஒரு படைப்பாளியாக இருந்து, Instagram இன் இந்த அம்சத்தைப் பயன்படுத்த விரும்பினால், இந்தக் கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  

குறுகிய வீடியோ பகிர்வு தளத்தின் அம்சம் Android மற்றும் iOS சாதனங்களுக்கானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க | அதிக இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைக் கொண்ட 5 விளையாட்டு நட்சத்திரங்கள் 

முதலில் உங்கள் சாதனத்தில் Instagram ஐத் திறக்கவும்.
அதன் பிறகு, மேல் வலது பக்கத்தில் உள்ள + ஐகானைக் கிளிக் செய்யவும்.
இப்போது பல விருப்பங்கள் உங்கள் முன் திறக்கும்.
அங்கிருந்து லைவ் என்பதைக் கிளிக் செய்யவும்.
இதற்குப் பிறகு, திரையின் இடது பக்கத்தில் வரும் காலண்டர் ஐகானைக் கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க | லட்சக்கணக்கில் திடீர் போனஸ் கொடுக்கும் நிறுவனம்!

இப்போது வீடியோ தலைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் நேரடி ஒளிபரப்பின் தலைப்பை உள்ளிடவும்.
தலைப்பை உள்ளிட்ட பிறகு, தொடக்க நேரம் என்ற விருப்பத்தைப் பெறுவீர்கள். அதைக் கிளிக் செய்து நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும். 
மூன்று மாதங்களுக்கு இடைப்பட்ட நேரத்தை தேர்ந்தெடுக்கலாம்.
நேரத்தை தேர்ந்தெடுத்ததும் முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் நேரலை வீடியோவை அட்டவணைப்படுத்து என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
இப்போது, உங்கள் நேரலை திட்டமிடப்படப்பட்டது.

மேலும் படிக்க  | ரூ.35,990 லேட்டஸ்ட் Oppo Reno6 5G போனின் விலை வெறும் ரூ. 13,040

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News