Maruti Suzuki அறிவித்துள்ள ஜூலை மாத Offer விவரங்கள்

Arena lineup மற்றும் Ertiga உள்ளிட்ட பல மாருதி சுசுகி கார்களில் இந்த நன்மைகள் பொருந்தும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 25, 2021, 12:24 PM IST
Maruti Suzuki அறிவித்துள்ள ஜூலை மாத Offer விவரங்கள் title=

மாருதி சுசுகி நிறுவனம் நடப்பு மாதமான ஜூலை 2021 இல் தங்களது நிறுவனத்தின் கார்களை புதிதாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக சில தள்ளுபடி ஆஃபர்களை அறிமுகம்படுத்தப்பட்டு உள்ளது. 

ஜூலை மாதத்திற்கான ஆஃபர்களின் ஒரு பகுதியாக கேஷ் டிஸ்கவுன்ட்ஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் டிஸ்கவுன்ட்ஸ் உள்ளிட்டவற்றை வழங்குவதாக அறிவித்துள்ளது மாருதி சுசுகி (Maruti Suzuki). முழு விவரத்தை இங்கே காண்போம்.

ALSO READ | Tata Cheapest SUV: தீபாவளி ரிலீசாக மலிவு விலையில் பட்டையைக் கிளப்ப வருகிறது Tata HBX

மாருதி ஆல்டோ
இந்த காருக்கு ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ .3,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. இந்த காரின் பெட்ரோல் என்ஜின் மாடல்களுக்கு ரூ.25,000 மற்றும் CNG என்ஜின் மாடலுக்கு ரூ.10,000 கேஷ் டிஸ்கவுன்ட் இருக்கிறது.

மாருதி செலிரியோ
மாருதி செலிரியோ மற்றும் செலிரியோ எக்ஸ் ஆகிய இரண்டு கார்களுக்கும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ .3,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாருதி டிசையர்
இந்த செடான் ரக காருக்கு ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 கேஷ் டிஸ்கவுன்ட் உள்ளிட்ட ஆஃபர்களை அறிவித்து உள்ளது.

மாருதி ஸ்விஃப்ட்
மாருதி ஸ்விஃப்ட் கார் ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட்டுடன் கிடைக்கிறது. காரின் LXI மாடலுக்கு ரூ.10,000 கேஷ் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் ZXI மற்றும் ZXI+ வேரியண்ட்களில் ரூ.15,000 கேஷ் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.

மாருதி வேகன்-ஆர்
இந்த வாகனத்திற்கு ரூ.15,000 கேஷ் டிஸ்கவுன்ட், CNG என்ஜின் மாடல்களுக்கு ரூ.5,000 கேஷ் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. இது தவிர கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் ரூ.3,000 மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.15,000 உள்ளிட்ட சலுகைகள் இருக்கின்றன.

ALSO READ | Maruti Suzuki அளித்த நல்ல செய்தி: இலவச வாரண்டி சேவையின் காலக்கெடு நீட்டிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News