Smartphone Year End Sale: ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன் ஆண்டு இறுதி விற்பனை சில நாட்களாக நடந்து வருகிறது. இதில் சாம்சங் மற்றும் ஆப்பிள் முதல் சியோமி, விவோ என அனைத்து பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கும் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
இந்த பதிவில் `நாம் iPhone 12 தொடர் போன்களில், அதாவது iPhone 12 Mini, iPhone 12 மற்றும் iPhone 12 Pro ஆகியவற்றில் கிடைக்கும் சில சிறந்த சலுகைகளைப் பற்றி காணலாம்.
ஐபோன் 12 மினியை வெறும் ரூ.23,499-க்கு வாங்குவது எப்படி?
64 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட iPhone 12 Mini சந்தையில் 59,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் பிளிப்கார்டில் (Flipkart) கிடைக்கும் 31% தள்ளுபடிக்குப் பிறகு இந்த போனை 40,999 ரூபாய்க்கு வாங்கலாம்.
மேலும், Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் இந்த போன் வாங்க பணம் செலுத்தினால், 5% அதாவது ரூ.2,050 கேஷ்பேக் கிடைக்கும். இதன் மூலம் போனின் விலை ரூ.38,949 ஆக குறையும். இது தவிர, வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த போனை எக்ஸ்சேஞ்ச் சலுகையில் வாங்கினால் ரூ.15,450 வரை சேமிக்கலாம். இதன் மூலம் இந்த ஆப்பிள் ஸ்மார்ட்போனை வெறும் ரூ.23,499-க்கு வாங்கி மகிழலாம்.
iPhone 12 இல் மிகப்பெரிய தள்ளுபடி
நீங்கள் ஐபோன் 12 ஐ (iPhone 12) வாங்கும் எண்ணத்தில் இருந்தால், இது அதற்கு ஏற்ற நேரம். இந்த ஆப்பிள் ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட்டில் அதன் அசல் விலையான ரூ.65,900-க்கு பதிலாக 21% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.51,999-க்கு வாங்கலாம். Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் இந்த 64GB போன் வாங்க பணம் செலுத்தினால், 5%, அதாவது ரூ.2,600 கேஷ்பேக் கிடைக்கும்.
அதன் பிறகு இந்த போனின் விலை ரூ.49,399 ஆக குறையும். உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக, எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் இந்த போனை வாங்கினால், ரூ.15,450 வரை சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்கள் பெற்றால், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.33,949 ஆக மேலும் குறையும்.
ALSO READ | வெறும் 500 ரூபாய்க்கு Realme 5G ஸ்மார்ட்போன் வாங்க அறிய வாய்ப்பு
ஐபோன் 12 ப்ரோவையும் மிகவும் மலிவாக வாங்கலாம்
iPhone 12 தொடரின் ப்ரோ மாடலான iPhone 12 Pro இன் விலையில் எந்த தள்ளுபடியும் வழங்கப்படவில்லை. எனினும், டீலில் சேர்க்கப்பட்டுள்ள கூடுதல் சலுகைகளின் உதவியுடன், இந்த ஸ்மார்ட்போனை (Smartphone) மிக மலிவாக வாங்க முடியும்.
இந்த 128 ஜிபி ஐபோன் 12 ப்ரோவின் அசல் விலை ரூ. 1,09,900. ஆனால் இந்த போனை வாங்கும் போது ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், 5% அதாவது ரூ. 5,495 கேஷ்பேக் கிடைக்கும். மற்றும் பழைய ஸ்மார்ட்போனுக்குப் பதிலாக இதை வாங்கினால், வாடிக்கையாளர்கள் 15,450 ரூபாய் வரை சேமிக்க முடியும். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்கள் பெற்றால், இந்த இரண்டு சலுகைகளையும் இணைத்து, போனின் விலை ரூ.88,955 ஆகக் குறையும்.
பிளிப்கார்டின் இந்த ஸ்மார்ட்போன் ஆண்டு இறுதி விற்பனை (Flipkart Smartphone Year End Sale) டிசம்பர் 26 அன்று தொடங்கி இன்று அதாவது டிசம்பர் 30 வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Flipkart Sale: iPhone 12 Mini இல் மாஸ் தள்ளுபடி, வாய்ப்பை தவறவிடாதீர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR