மலிவு விலையில் நல்ல ஆண்ட்ராய்டு போன் "Moto E40 ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு"

Moto E40 Price Drop: குறைந்த விலையில் ஒரு நல்ல ஆண்ட்ராய்டு போனை வாங்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், இந்த  மோட்டோ இ40 (Moto E40) உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 6, 2022, 04:39 PM IST
  • பிளிப்கார்ட்டில் மோட்டோ இ40 போனின் விலைக் குறைப்பு.
  • இந்த ஸ்மார்ட்போன் இப்போது ரூ 8,599 இல் தொடங்குகிறது.
  • எக்ஸ்சேஞ்ச் சலுகையும் மற்றும் EMI வசதியும் கிடைக்கும்.
மலிவு விலையில் நல்ல ஆண்ட்ராய்டு போன் "Moto E40 ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு" title=

Moto E40 Price Drop: கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ40 (Moto E40) ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் இதன் விலை ரூ.9,499க்கு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் 8,500 ரூபாயாக குறைக்கப்பட்டது. Flipkart Black Friday Deal விற்பனையில் ரூ.8,299-க்கு விற்கப்பட்டது. 

இந்த மோட்டோ இ40 (Moto E40) ஸ்மார்ட்போன் கார்பன் கிரே மற்றும் பிங்க் கிளே உட்பட மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. நீங்கள் இந்த போனை வாங்க விரும்பினால், Flipkart தளத்தில் வாங்கலாம்.

90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, டிரிபிள் கேமராக்கள், பாஸ்ட் சார்ஜிங் மற்றும் பேட்டரி பேக்கப் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களை அறிந்துக்கொள்ளுவோம்.

மேலும் படிக்க: ஆஃபர் இப்படி இருக்கனும்! 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.7 ஆயிரத்துக்கும் குறைவான விலையில்

மோட்டோரோலா மோட்டோ E40 விவரக்குறிப்புகள்:
விலைக்கு ஏற்ற ஸ்மார்ட்போனாக மோட்டோ இ40 உள்ளது. இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட்துடன் 6.5-இன்ச் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 1600x720 பிக்சல்கள், HD+ கொண்ட IPS LCD பேனல் கொண்டது.

இது மாலி G52 GPU உடன் இணைக்கப்பட்ட Unisoc T700 SoC பிராசஸர் வசதி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இஎம்எம்சி 5.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் மெமரி நீட்டிப்பு செய்யலாம். 

ஸ்மார்ட்ஃபோன் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 48MP பிரதான லென்ஸுடன் பேஸ் பியூட்டி, எச்டிஆர் நைட் விஷன், ஆட்டோ ஃபோகஸ் அம்சங்கள் உள்ளது. இது 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் மூலம் செயல்படுகிறது. முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்க 8எம்பி கேமரா உள்ளது. முன் மற்றும் பின்புற கேமராக்கள் மூலம் 1080 பிக்சல் அளவில் தரமான வீடியோக்களை எடுக்கலாம். 

மேலும் படிக்க: Flipkart Black Friday Sale: இந்த அட்டகாசமான போனை இலவசமாக வாங்கலாம்

பேட்டரியைப் பொறுத்தவரை, இது 10W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAhcell எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. கைரேகை ஸ்கேனர் உள்ளது. இந்த போன் 4G-ஐ மட்டும் ஆதரிக்கும். 5G கிடையாது. மேலும் Wi-Fi மற்றும் புளூடூத் 5.0 போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை உள்ளடக்கியுள்ளது. வேறு சில ஃபோன்களைப் போலல்லாமல், உங்கள் வயர்டு ஹெட்ஃபோன்களை இணைக்க E40 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் உடன் வருகிறது.

குறைந்த விலையில் ஒரு நல்ல ஆண்ட்ராய்டு போனை வாங்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், இந்த  மோட்டோ இ40 (Moto E40) உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

 

Trending News