OnePlus 9 5G போனை பாதி விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு: அமேசானில் அதிரடி சலுகை!!

நீங்கள் OnePlus 9 5G போனை வாங்க திட்டமிட்டிருந்தால், இது உங்களுக்கு சிறந்த நேரமாக இருக்கும். இப்போது இந்த போனை அமேசானில் மலிவாக வாங்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2021, 02:36 PM IST
  • OnePlus நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் OnePlus 9 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.
  • OnePlus 9 5G போனை வாங்க தற்போது சிறந்த நேரம் வந்துள்ளது.
  • இப்போது இந்த போனை அமேசானில் மலிவாக வாங்கலாம்.
OnePlus 9 5G போனை பாதி விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு: அமேசானில் அதிரடி சலுகை!! title=

OnePlus நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் OnePlus 9 5G  ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த போன் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது. பிரபலமான பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் வரிசையில் ஆப்பிள் மற்றும் சாம்சங்கிற்குப் பிறகு, ஒன்பிளஸ் போன்கள்தான் உள்ளன. இவற்றை பயனர்கள் விரும்பி வாங்குகின்றனர்.

நீங்கள் OnePlus 9 5G போனை வாங்க திட்டமிட்டிருந்தால், இது உங்களுக்கு சிறந்த நேரமாக இருக்கும். இப்போது இந்த போனை அமேசானில் மலிவாக வாங்கலாம். போனின் அடிப்படை மாடலின் விலை ரூ .49,999 ஆகும். ஆனால், இந்த வழியில் வாங்கினால் இந்த போனை 28 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம்.

OnePlus 9 5G இல் கிடைக்கும் சலுகைகள்

அமேசானில் OnePlus 9 5G போனில் அதிரடியான சலுகை கிடைக்கிறது. ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்ட் (HDFC Credit Card) கொண்டு போனை வாங்கினால், உங்களுக்கு ரூ. 3,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

இந்த போனுடன் 18,450 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. இந்த பரிமாற்ற சலுகை உங்கள் தொலைபேசியின் நிலை மற்றும் மாதிரியைப் பொறுத்தது. ரூ .18,450 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைத்தால் ரூ .50,000 மதிப்புள்ள போனை ரூ .28,450 க்கு வாங்கலாம்.

OnePlus 9: இந்தியாவில் இதன் விலை

இந்தியாவில், ஒன்பிளஸ் 9 5 ஜி (OnePlus 9 5G) ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இதில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இரு வகைகள் அடங்கும்.

ALSO READ: OnePlus 9 லேட்டஸ்ட் போனில் கிடைக்கிறது ரு. 21,000 வரை தள்ளுபடி: சலுகை பெறுவது எப்படி?

இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) மூன்று வண்ணங்களில் வருகிறது. இதில் ஆஸ்ட்ரல் பிளாக், ஆர்க்டிக் ஸ்கை மற்றும் விண்டர் மிஸ்ட் ஆகியவை அடங்கும். விலை பற்றி பேசுகையில், 8 ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 9 இன் அடிப்படை மாடலின் விலை 49,999 ரூபாய் ஆகும். 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 9 இன் டாப் எண்ட் மாடல் விலை 54,999 ரூபாய் ஆகும்.

ஒன்பிளஸ் 9: விவரக்குறிப்புகள்

ஒன்பிளஸ் 9 இல் 6.55 இன்ச் சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே உள்ளது. இதன் ஸ்க்ரீன் ரெசல்யூஷன் 1080 × 2400 பிக்சல்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC ஆனது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜை விரிவாக்கக்கூடிய வசதியும் உள்ளது. ஒன்பிளஸ் 9 போனில் 4500mAh பேட்டரி உள்ளது. இது வார்ப் சார்ஜ் 65T அவுட் ஆஃப் தி பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 9: கேமரா

ஒன்பிளஸ் 9-ல் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் 48 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் உள்ளது. இதில் 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மோனோகிராம் கேமரா மற்றும் டூயல் எல்.ஈ.டி ஃப்ளாஷ் ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில், தொலைபேசியில் 16 மெகாபிக்சல் சோனி IMX471 சென்சார் கொண்டுள்ளது.

ALSO READ: OnePlus 9 தொலைபேசி 50% தள்ளுபடியில் கிடைக்கிறது: எங்கே? முழு விவரம் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News