ஆன்லைன் பயண போர்டல் தளமான MakeMyTrip, இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனைத்தளமான Flipkart உடன் இணைந்துள்ளது, இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பயண டிக்கெட்டுகளை Flipkart தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்!
MakeMyTrip-ன் இதர அங்களான Goibibo மற்றும் RedBus உள்ளிட்ட பயண சேவை நிறுவனங்களின் பயண டிக்கெட்டுகளை Flipkart இன் தளத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கு வாய்ப்புகளை வழங்கிறது.
ஓட்டல்கள், விடுதிகள் முன்பதிவு போன்ற சேவைகளும் Flipkart-ல் இணையவுள்ள நிலையில் இன்னும் சில வாரங்களில் விமான பயணத்திற்கான டிக்கெட்டுகளையும் இந்த தளத்தில் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து MakeMyTrip நிறுவனர் மற்றும் குழு தலைமை நிர்வாக அதிகாரி தீப் கல்ரா தெரிவிக்கையில்.. "இந்த கூட்டணி ஆனது பரந்தளவிலான வாடிக்கையாளர்களை கவர்வதற்கான ஒரு வாய்ப்பாக அமையும்" என தெரிவித்துள்ளார்.
Flipkart தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தெரிவிக்கையில், "அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குமான ஒரே ஒரு இலக்கை இலக்காக வைத்து, வாடிக்கையாளர்களுக்கும், தொலைதூர பகுதிகளிலிருந்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தடையற்ற அனுபவத்தை வழங்குவதற்கு இந்த கூட்டணி உருதுணையாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்!