மீண்டும் ₹ 98, ₹ 149 திட்டங்களை கொண்டு வந்தது Reliance Jio...

அவ்வப்போது அதிரடி திட்டங்களை அறிவித்து வரும் ரிலையன்ஸ் ஜியோ தற்போது தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக ரூ.98 மற்றும் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. 

Updated: Dec 9, 2019, 05:29 PM IST
மீண்டும் ₹ 98, ₹ 149 திட்டங்களை கொண்டு வந்தது Reliance Jio...

அவ்வப்போது அதிரடி திட்டங்களை அறிவித்து வரும் ரிலையன்ஸ் ஜியோ தற்போது தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக ரூ.98 மற்றும் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. 

உயர்த்தப்பட்ட மொபைல் கட்டணங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட IUC நிமிடங்களுடன் புதிய ஆல் இன் ஒன் திட்டங்களை அறிவித்த பின்னர் நிறுவனம் இந்த இரண்டு திட்டங்களையும் திரும்ப கொண்டுவந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ரூ.98 திட்டத்தில், பயனர்கள் 28 நாட்களுக்கு 2GB மொபைல் தரவு, 300 SMS வசதிகளை பெறுவர். அதேவேளையில் ஜியோ பயன்பாடுகள் மற்றும் ஜியோ-ஜியோ நெட்வொர்க்கிற்கு இலவச வரம்பற்ற அழைப்பு வசதியினையும் பெறுவார்கள். இந்த திட்டத்தில் வரையறுக்கப்பட்ட இலவச IUC நிமிடங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் மாதாந்திர தரவு ஒதுக்கீடு தீர்ந்துவிட்ட பிறகு பயனர்கள் 64Kbps வேகத்தில் தரவைப் பெறுவார்கள் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேவேளையில் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149 திட்டத்தின் கீழ், சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 1GB தரவைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் இலவச ஜியோ-ஜியோ அழைப்பு மற்றும் 300 நிமிட ஜியோ-ஜியோ அல்லாத அழைப்பு நிமிடங்கள் ஆகியவை கிடைக்கும். பயனர்கள் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் ஜியோ பயன்பாடுகளின் சந்தாவைப் பெறுவார்கள். ஆனால் இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள் மட்டுமே ஆகும்.

இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் இரண்டும் ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா மற்ற நெட்வொர்க்குகளுக்கு இலவசமாக வெளிச்செல்லும் அழைப்புகளின் திட்டங்களை அகற்றுவதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே ரிலையன்ஸ் ஜியோ இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

குறித்த இந்த இரண்டு டெலிகாம் ஆபரேட்டர்கள் மற்ற டெல்கோக்களின் நெட்வொர்க்கிற்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் 1,000 நிமிட திட்டம், 84 நாட்கள் செல்லுபடியாகும் 3,000 நிமிட திட்டம் மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும் 12,000 நிமிட திட்டம் ஆகியவற்றை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைக்கு ரிலையன்ஸ் ஜியோ பதிலளிக்கும் விதமாக எடுத்துள்ள புதிய திருத்தப்பட்ட திட்டங்கள் மற்ற ஆபரேட்டர்களின் ஒப்பிடத்தக்க திட்டங்களை விட 25 சதவீதம் வரை அதிக மதிப்பை வழங்குகின்றன என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.