லண்டன்: புகழ்பெற்ற புகைப்படம் பகிர்வு செயலியான ’ஸ்நாப்சேட்’ நேற்று பல மணிநேரங்கள் செயலற்றதை அடுத்து உலகம் முழுவதிலும் மில்லியன் கணக்கான பயனர்கள், குறிப்பாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ‘ஸ்நாப்சேட்’-ல் இருந்து விலகியுள்ளனர்.
வலைத்தள ஓட்டங்களை கண்காணிக்கும் டவுன் டிடெக்டர் வலைத்தளத்தின் கருத்தின்படி, ஆயிரக்கணக்கான பயனர்கள் நேற்று புகைப்படங்களை அனுப்புவதில் சிக்கல்களை சந்தித்துள்ளதாக பதிவு செய்துள்ளனர். இணைப்பு பிரச்சனைகள், தங்கள் கணக்குகளில் உள்நுழைதல் என பல பிரச்சனைகள் அடங்கும் என மான்சன் ஸ்டாண்டர்டு பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
ஸ்நாப்சேட் நிறுவனமும் இதனை ஒப்புக்கொள்ளும் விதமாக தங்களது ட்விட்டரில் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது.
Some Snapchatters are having trouble with Chats. We're looking into it
— Snapchat Support (@snapchatsupport) October 9, 2017
உலகப் புகழ் பெற்ற ஸ்நாப்சேட் இந்தியாவில் அவ்வளவாக ஆதரவினை பெறாத போதிலும் உலகளவில் தற்போது 166 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!