Tech News: YouTube-ல் இனி கீழ்த்தரமான பின்னூட்டம் அளித்தால் pop-up மூலம் warning கிடைக்கும்

இந்த அம்சம் இப்போது YouTube பயன்பாட்டின் Android பதிப்புகளில் மட்டுமே சோதிக்கப்படுகிறது. இது விரைவில் பிரௌசர் மற்றும் iOS பதிப்புகளுக்கும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 8, 2020, 07:14 PM IST
  • YouTube ஒரு புதிய அம்சத்தை கொண்டு வருகிறது.
  • தளத்தில் கீழ்த்தரமான பின்னூட்டங்களை தவிர்க்க இந்த அம்சம் உதவும்.
  • இந்த அம்சம் இப்போது YouTube பயன்பாட்டின் Android பதிப்புகளில் மட்டுமே சோதிக்கப்படுகிறது.
Tech News: YouTube-ல் இனி கீழ்த்தரமான பின்னூட்டம் அளித்தால் pop-up மூலம் warning கிடைக்கும் title=

இணையம் நம் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. COVID காலங்களில் தனி மனித இடைவெளி காரணமாக நாம் அனைவரும் பிரிந்திருந்தபோது, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இனைந்து இருக்கவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் இணையதளம் நமக்கு பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது.

இருப்பினும், இணையத்தின் சில அம்சங்கள் மிகவும் நச்சுத்தன்மை உடையவையாக உள்ளன. சமூக ஊடகங்கள் மற்றும் அதன் இடுகைகளில் தங்களால் எதை வேண்டுமானாலும் சொல்ல முடியும் என்பதை உணர்ந்த மக்கள், மோசமான மற்றும் கீழ்த்தரமனா முறைகளில் கருத்துக்களை தெரிவிக்க முனைகிறார்கள்.

இது அந்த குறிப்பிட்ட வீடியோவை அல்லது புகைப்படத்தை பகிர்ந்தவர்களுக்கோ, அல்லது தங்கள் கருத்துக்களை சொல்லி, அதற்கு கீழ்த்தரமான பின்னூட்டங்களை பெற்றவர்களுக்கோ அதிக அளவிலான மனச்சோர்வை (Stress) ஏற்படுத்தும்.

YouTube தனது வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் இவ்வகையான நடத்தையை மாற்ற விரும்புகிறது. ஒரு கருத்தை ஒரு பயனர் போஸ்ட் செய்வதற்கு முன்னர், அந்த போஸ்டை ஒரு முறை சரிபார்க்கும் முறையை YouTube கொண்டுவரவுள்ளது. பொஸ்ட் செய்பவரிடம் அவர் அந்த பின்னூட்டத்தை போஸ்ட் செய்ய விரும்புகிறாரா அல்லது அதை மாற்ற விரும்புகிறாரா என்ற கேள்வியும் கேட்கப்படும்.

யாராவது அநாகரிகமான அல்லது இழிவான போஸ்டுகளையோ அல்லது பின்னூட்டங்களையோ பகிர்வது கண்டறியப்பட்டால், ஒரு பாப்-அப் (Pop Up) வெளிப்படும். “கருத்துகளை மரியாதையுடன் வெளியிடுங்கள். உங்கள் கருத்து பொருத்தமானதா என்று உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்றால், எங்கள் சமூக வழிகாட்டுதல்களில் ஒரு முறை பார்த்துக்கொள்ளவும்.” என்று பாப்-அப்பில் எழுதப்பட்டிருக்கும்.

வழிமுறையை சிறப்பாகப் பயிற்றுவிப்பதற்கும், மேலும் தவறுகளைத் தடுப்பதற்கும் அங்கீகாரம் தவறாக இருந்தால், இடுகையை flag செய்து குறியிடவும் பாப் அப் கோருகிறது.

ALSO READ: Shocking: லாபம் ஈட்ட 20 மில்லியன் போன்களில் வைரசை புகுத்தியது இந்த மொபைல் நிறுவனம்

YouTube ஒரு அறிக்கையில், “பயனர்களால் மீண்டும் மீண்டும் புகாரளிக்கப்பட்ட உள்ளடக்கத்திலிருந்து எங்கள் கணினி கற்றுக்கொள்கிறது. நாங்கள் தொடர்ந்து கருத்துரைகளை வளர்த்துக் கொண்டிருப்பதால், அதை சரியாக கருத்தில் கொள்வது குறித்து மேலும் அறிய முடியும் என்று நம்புகிறோம். இன்னும் பல வேலைகள் செய்யப்பட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும், இது ஒரு தொடக்கம்தான். YouTube இல் மரியாதைக்குரிய தொடர்புகளை ஊக்குவிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதே நேரத்தில் மக்களைக் கேவலமாகக் காட்டக்கூடிய கருத்துகளிலிருந்து எங்கள் பயனர்களை பாதுகாக்கிறோம்." என்று கூறியுள்ளது.

YouTube எடுத்துள்ள இந்த நடவடிக்கை, பயனர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதை தடுக்க முடியாது. அவர்கள் விரும்பினால், தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம். ஆனால், உண்மையில் கண்ணியமான பயனர்களாக இருக்க விரும்பும் சிலர், இப்படிப்பட்ட பாப் அப்கள் மூலம் தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொள்ள தூண்டப்படலாம். இதுதான் YouTube –ன் நோக்கம்.

இந்த அம்சம் இப்போது YouTube பயன்பாட்டின் Android பதிப்புகளில் மட்டுமே சோதிக்கப்படுகிறது. இது விரைவில் பிரௌசர் மற்றும் iOS பதிப்புகளுக்கும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: PUBG பிரத்யேக செயலிகளை கொண்ட நாடுகளின் பட்டியல்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News