Tech Tips: இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க.... ஸ்மார்போன் கேமிரா காலியாகிவிடும்

ஸ்மார்ட்போன்கள் தொலைத் தொடர்பு வசதிக்கு மட்டுமின்றி, மொபைல் போன்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கான சிறந்த ஆதாரமாக ஆகி விட்டன. இப்போதெல்லாம் போன் வாங்கும் முன் முதலில் செக் செய்வது அதன் கேமராவைத் தான்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 3, 2024, 03:35 PM IST
  • கேமிராவில் என்ன என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
  • நாம் செய்யும் பொதுவான சில தவறுகளால், கேமிரா பாதிக்கப்படலாம்.
  • மொபைல் போன்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கான சிறந்த ஆதாரமாக ஆகி விட்டன.
Tech Tips: இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க.... ஸ்மார்போன் கேமிரா காலியாகிவிடும்

ஸ்மார்ட்போன் என்பது தொலைதொடர்பு சாதனம் என்ற நிலை மாறி, காலை விழித்தது முதல் இரவு படுக்கும் வரை தேவைப்படும் அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது. சுருக்கமாக கூற வேண்டும் என்றால், இன்றைய டிஜிட்டல் உலகில், நமது வாழ்க்கையை ஸ்மார்ட்போன்கள் தான் இயக்குகின்றன. தொலைத் தொடர்பு வசதிக்கு மட்டுமின்றி, மொபைல் போன்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கான சிறந்த ஆதாரமாக ஆகி விட்டன. இப்போதெல்லாம் போன் வாங்கும் முன் முதலில் செக் செய்வது அதன் கேமராவைத் தான். எந்த அளவிற்கு அதன் மெகாபிக்ஸ்ல் உள்ளது. அதில் உள்ள கேமிராவின் என்ன என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது முதலில் பார்க்கப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும் போது, நாம் செய்யும் பொதுவான சில தவறுகளால், கேமிரா பாதிக்கப்படலாம். யாரேனும் ஒருவர் போனில் (Smartphone) இருந்து புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும்போது, ​கேமராவை சுத்தம் செய்வதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். நாமும் செய்வோம். ஆனால் கேமராவை சரியாக சுத்தம் செய்கிறீர்களா? தவறான முறையில் சுத்தம் செய்தால், அது உங்கள் கேமராவை பாதிக்கலாம். உங்களுக்கு இழப்பு ஏற்படலாம். போனின் கேமராவை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், அதை எப்படி சுத்தம் செய்ய வேண்டும், எப்படி சுத்தம் செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

போனின் கேமரா பழுதடையலாம்

ஃபோன் கேமராவை உங்கள் விரல்களால் அவசரமாக அழுத்தம் கொடுத்து சுத்தம் செய்வது பொதுவாக செய்யப்படும் தவறு. கைரேகைகள் அதில் பதிவதோடு, இந்த தவறை அடிக்கடி செய்தால், கேமரா லென்ஸ் சேதமடையலாம். இது தவிர, பலருக்கு தொலைபேசி கேமரா சுத்தம் செய்ய கையில் கிடைத்த துணியை பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. கடினமான அல்லது சொரசொரப்பான துணியை பயன்படுத்துவதல், கேமராவில் கீறல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தொலைபேசியின் கேமராவை எவ்வாறு சுத்தம் செய்வது எப்படி நீங்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியம்.

மேலும் படிக்க | எச்சரிக்கை... ஸ்கிரீன் கார்டுகள் உங்கள் ஸ்மார்ட்போனை காலி செய்யலாம்

கேமிரா லென்ஸை சுத்தப்பட்டுத்த எந்த துணி பயன்படுத்த வேண்டும்?

ஸ்மார்ட்போனில் உள்ள மிக முக்கியமான பகுதி அதன் கேமரா ஆகும். அதை சுத்தம் செய்ய நீங்கள் எப்போதும் மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்த வேண்டும். இது லென்ஸை சுத்தமாக வைத்திருப்பதோடு, கீறல்களிலிருந்தும் பாதுகாக்கிறது. இந்த துணியைத் தவிர, நீங்கள் பருத்தி துணியையும் பயன்படுத்தலாம், ஆனால் கரடுமுரடான துணி அல்லது தரமற்ற டிஷ்யூ பேப்பரைப் பயன்படுத்த கூடாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவும்.

தண்ணீர் மற்றும் திரவம்

கேமரா லென்ஸை மென்மையாக சுத்தம் செய்ய வேண்டும், உங்கள் பலத்தை பிரயோகித்து சுத்தம் செய்யக்கூடாது. எந்த விதமான திரவம் அல்லது தண்ணீரால் அதை சுத்தம் செய்ய முயற்சிக்காதீர்கள். இந்த தவறுக்கு அதிக விலை கொடுக்க நேரிடலாம். கேமராவும் சேதமடையலாம். நீங்கள் திரவத்தைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் லென்ஸ் கிளீனர் அல்லது எலக்ட்ரானிக் டிவைஸ் கிளீனரைப் பயன்படுத்தலாம். அதையும் நேரிடையாக அதன் மீது தெளிக்காமல், மைக்ரோ பைபர் துணியில் தெளித்து பயனபடுத்துவது பாதுகாப்பானது.

மேலும் படிக்க | ஆப்பிள் ஐபோன் இல்லை... இவை தான் உலகின் மிக விலையுயர்ந்த ஸ்மார்போன்கள்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News