தமிழ்நாட்டின் கரூர் (Karur) மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களின் சோதனை செயற்கைக்கோள், அமெரிக்காவின் தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி ஏஜென்சியால் (NASA) ஜூன் மாதத்தில், சௌண்டிங் ராக்கெட் 7 மூலம் துணை சுற்றுப்பாதையில் செலுத்தப்படும்.
தான்தோன்றிமலையைச் சேர்ந்த எம். அத்னான், நாகம்பள்ளியைச் சேர்ந்த எம். கேசவன் மற்றும் தென்னிலையைச் சேர்ந்த வி.அருண் ஆகிய மூன்று மாணவர்கள், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது அவர்களின் சோதனை மாதிரியுடன் இந்தப் பணித்திட்டத்தைத் தொடங்கினர்.
சென்னையைத் தளமாகக் கொண்ட ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவால் வழிநடத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள் மாதிரி, நாசாவுடன் இணைந்து ஐடுட்லெடு இன்க் திட்டமான கியூப்ஸ் இன் ஸ்பேஸ் நடத்திய உலகளாவிய போட்டியின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்ட பல செயற்கைக்கோள்களை பின்னுக்குத் தள்ளி முன்னணியில் வந்துள்ளது.
அவர்களின் கண்டுபிடிப்பான India Sat, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான விரிவான ஆராய்ச்சிக்குப் பின்னர் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகச்சிறிய மற்றும் இலகுவான செயற்கைக்கோள் எனக் கருதப்படுகிறது. இது வலுவூட்டப்பட்ட கிராபெனின் பாலிமரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் 3 செ.மீ அளவும் 64 கிராம் எடையும் கொண்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் (Satellite) அதன் சொந்த சூரிய மின்கலத்துடன் பொருத்தப்பட்டிருக்கிறது. அது அதற்குத் தேவையான பவரை உருவாக்கும். இதிலுள்ள இதன் சொந்த ரேடியோ அதிர்வெண் மூலம், இது பூமிக்கும் விண்வெளிக்கும் இடையில் தரவுகளை எளிதாக அனுப்பவும் பெறவும் முடியும். செயற்கைக்கோளின் ஃபோடோகிராபிக் ஃபிலிம் ராக்கெட்டுக்குள் இருக்கும் அண்ட கதிர்வீச்சை உறிஞ்சி அளவிடும்.
ALSO READ: COVID-19 போரில் பங்குகொள்ள வருகிறது COORO Robot!! தமிழக மாணவர்கள் சாதனை!!
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் (Space Kids India) ரிஃபாத் ஷாரூக் இந்த செயற்கைக்கோளைச் செய்த அணிக்கு வழிகாட்டியாக இருந்தார். அவர் தன் குழுவின் இந்த சாதனையால் பெருமகிழ்ச்சியில் இருக்கிறார்.
இந்த பணித்திட்டத்திற்கான நிதியுதவியை கரூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியின் இயற்பியல் துறை செய்தது. இந்த முழு ஆராய்ச்சிக்கும் தேவைப்பட்ட தொகையான 1.35 லட்சம் ரூபாயை அத்துறை அளித்து.
முன்னதாக, 2017 ஆம் ஆண்டில் ஷாரூக்கின் குழு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (APJ Abdul Kalam) பெயரிடப்பட்ட கலாம்சாட்டை (Kalam Sat) வடிவமைத்திருந்தது. இது அதே ஆண்டு ஜூன் மாதத்தில் NASA-வால் செலுத்தப்பட்டது.
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஸ்ரீமதி கேசனின் மேற்பார்வையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
"கலாம்சாட் கடலில் விழுந்தது. அது மீட்கப்படும், தரவை டிகோடிங் செய்வதற்காக NASA அதை எங்களிடம் திருப்பி அனுப்பும்" என்று கேசன் ஊடகங்களுடன் பேசியபோது தெரிவித்தார்.
ALSO READ: மனம் இருந்தால் மார்க்கம் உண்டு: படிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் இணயத்தில் வைரலாகும் ஹரீஷ்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR