இஎம்ஐ மூலம் Toyota Fortuner- ஐ சொந்தமாக்குங்கள்!

டொயோட்டா பார்ச்சூனர் கார் மீது உங்களுக்கு விருப்பம் இருந்தால், அந்த கார்களின் விலை உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 24, 2022, 07:32 PM IST
  • டொயோட்டா கார் வேரிய்ண்டுகள் விலை
  • இஎம்ஐ-ல் வாங்க விருப்பமா?
  • விலை மற்றும் இஎம்ஐ முழு விவரம் இதோ
இஎம்ஐ மூலம் Toyota Fortuner- ஐ சொந்தமாக்குங்கள்! title=

Toyota Fortuner All Variant Price: டொயோட்டா ஃபார்ச்சூனர் SUV பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. மிகவும் விலை உயர்ந்த காராக இருப்பதால், பலருக்கு இந்த கனவு காராக இருக்கிறது. இதன் டாப் வேரியண்ட் ரூ.50 லட்சம் வரை செல்கிறது. ஆனால், அடிப்படை வேரியண்ட்டின் விலை குறைவாக உள்ளது. இந்த காரை வாங்கும் விருப்பம் இருந்தால், ஒட்டுமொத்த வேரியண்டுகளின் விலை மற்றும் இஎம்ஐ விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம். 

டொயோட்டா ஃபார்ச்சூனரின் பேஸிக் வேரியண்ட்

(2.7L) 4x2 MT பெட்ரோல் மாடல், டொயோட்டா ஃபார்ச்சூனரின் பேஸிக் வேரியண்ட். இதன் விலை ரூ.32,40,000.  மற்றொரு பேஸிக் வேரியண்ட், (2.7L) 4x2 AT பெட்ரோல் வகையைச் சேர்ந்தது. அதன் விலை ரூ.33,99,000. இந்த இரண்டு வேரியண்ட்கள் மட்டுமே பெட்ரோலில் வருகிறது. மற்ற வேரியண்டுகள் டீசல் வகைகள். டொயோட்டா ஃபார்ச்சூனரின் டீசல் வேரியண்ட் ரூ.34,90,000-ல் தொடங்கி, GR-S (2.8L) 4x4 AT (டாப் வேரியண்ட்)க்கு ரூ.49,57,000 வரை விற்பனையாகிறது. இந்த விலைகள் அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் ஆகும்.

மேலும் படிக்க | மீண்டும் வரும் Yamaha RX 100 விலை? பணத்தை ரெடி பண்ணுங்கோ

பேஸிங் வேரியண்ட் டொயோட்டா ஃபார்ச்சுனரை வாங்க விரும்பினால், நீங்கள் ரூ.12.40 லட்சம் முன்பணம் செலுத்தினால் போதும். பின்னர், 8% வட்டியில் ரூ.20 லட்சம் வாகனக் கடனை 7 ஆண்டுகளுக்கு திரும்ப செலுத்தலாம். மாதந்தோறும் இஎம்ஐ ரூ.31172 ஆக இருக்கும். லோன் ரூ.15 லட்சமாக இருந்தால், இந்த இஎம்ஐ ரூ.23,379 ஆக இருக்கும்.

டொயோட்டா ஃபார்ச்சூனரின் அனைத்து வகைகளின் விலைகள்

-(2.7L) 4x2 MT- ரூ 32,40,000
-(2.7லி) 4x2 ஏடி- ரூ 33,99,000
-(2.8L) 4x2 MT- ரூ 34,90,000
-(2.8லி) 4x2 ஏடி- ரூ 37,18,000
-(2.8L) 4x4 MT- ரூ 38,54,000
-(2.8லி) 4X4 ஏடி- ரூ 40,83,000
-GR-S (2.8L) 4x4 AT- ரூ 49,57,000

மேலே குறிப்பிட்டுள்ள டொயோட்டா ஃபார்ச்சுனரின் மாடல்களில் முதல் இரண்டு பெட்ரோல் எஞ்சின் வகைகளாகும். மற்ற அனைத்தும் டீசல் என்ஜின்கள். இந்த கார்கள் காஸ்டிலி கார்கள். இதனை வாங்குவது உங்கள் விருப்பம் என்றால், அந்த நகரங்களுக்கு ஏற்ப விலை பட்டியலில் மாற்றம் இருக்கும். ஆன்ரோடு விலை இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. இதனடிப்படையில் இஎம்ஐ செலுத்துவதும் கூடுதலாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.  

மேலும் படிக்க | மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா எஸ்யூவி ஜூலை 20ம் தேதி அறிமுகம்: விலை ரூ 15 லட்சம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News