Vivo V20 Pro: கவர்ச்சிகரமான தோற்றத்தில் 5G ஸ்மார்ட்போன்

Vivo V20 Pro கவர்ச்சிகரமான தோற்றத்தில் 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன கேமரா கொண்ட 5 ஜி ஸ்மார்ட்போன் இது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 3, 2020, 08:18 PM IST
  • கவர்ச்சிகரமான தோற்றத்தில் 5G ஸ்மார்ட்போன்
  • முன்புற கேமரா மற்றும் டிரிபிள் ரியர் கேமரா இருக்கிறது
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 765G, 5G இயங்குதளத்தில் இயங்குகிறது
Vivo V20 Pro: கவர்ச்சிகரமான தோற்றத்தில் 5G ஸ்மார்ட்போன் title=

புதுடெல்லி: விவோ (Vivo)  தனது புதிய ஸ்மார்ட்போன் விவோ வி 20 ப்ரோ-வை (V20 Pro)  அறிமுகப்படுத்தியுள்ளது.நவீன கேமரா கொண்ட 5 ஜி ஸ்மார்ட்போன் இது. தனது பெரும்பாலான கைப்பேகளைப் போலவே, நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள செல்ஃபி கேமராவிலும் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி - ஒரே ஒரு சேமிப்பக (storage option) தெரிவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Vivo V20 Pro, 29,990 ரூபாய்க்கு கிடைக்கிறது. நிறுவனம் தனது பெரும்பாலான தொலைபேசிகளைப் போலவே இந்த ஸ்மார்ட்போனில் உள்ள செல்ஃபி கேமராவிலும் (selfie camera) கவனம் செலுத்தியுள்ளது. 

முன்புற கேமரா மற்றும் டிரிபிள் ரியர் கேமரா (rear camera) அமைப்புடன் வருகிறது 5G ஸ்மார்ட்போன் இது. இந்தியாவில் 5 ஜி நெட்வொர்க் இன்னும் கிடைக்கவில்லை, ஆனால் கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் 5Gக்கு தயாராகிவிட்டன. அம்சங்களை வைத்து பார்க்கும்போது Vivo V20 Pro மிகவும் சக்திவாய்ந்ததாக தோன்றுகிறது.  

Vivo V20 Pro-டிஸ்ப்ளே

Vivo V20 Pro ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் 2400 எக்ஸ் 1080 ரெசல்யூஷன் (resolution) எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே உள்ளது. ஸ்மார்ட்போனில் அமோல்ட் டிஸ்ப்ளே (Amoled display) உள்ளது.  இந்த தொலைபேசியில் உங்களுக்கு கொள்ளளவு மல்டி டச் ஸ்கிரீன் (Multi Touch Screen) வழங்கப்பட்டுள்ளது. Vivo V20 Pro ஸ்மார்ட்போனில், முன்புறமும் பின்புறமும் கண்ணாடி பாதுகாப்பு உள்ளது. இதில் வீடியோ வண்ணங்களும் பார்ப்பதற்கு நன்றாக வந்துள்ளது.

Also Read | இந்தியாவில் Laptop விற்பனையில் விரைவில் களமிறங்கவுள்ளது Nokia

இயக்க முறைமை மற்றும் செயலி

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765G (Qualcomm Snapdragon 765G) 5G இயங்குதளத்தில் இயங்குகிறது, இது ஆக்டா கோர் செயலியாகும். இது OnePlus Nord உடன் நேரடியாக போட்டியிடும் என்பது தெளிவாகிறது. ஆண்ட்ராய்டு 11 ஐ ( Android 11) அடிப்படையாகக் கொண்ட ஃபன்டூச்சோஸ் 11 (FuntouchOS 11)  இயக்க முறைமை கொண்டுள்ளது  Vivo V20 Pro ஸ்மார்ட்போன் (smart phone). இருப்பினும், இதில் ஆண்ட்ராய்டு 11 கிடையாது.

ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பு விரைவில் ஓடிஏ (OTA) வழியாக வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Also Read | Vi-ன் REDX Family Plan: 150GB data, OTT இலவச சந்தா, இன்னும் பல சலுகைகள்

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News