Whatsapp அட்டகாசமான புதிய அம்சம்: இனி இங்கும் ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்

Whatsapp: மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் இந்த புதிய அம்சத்தை பற்றி தனது பேஸ்புக் கணக்கில் அறிவித்துள்ளார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 9, 2023, 02:29 PM IST
  • வாட்ஸ்அப், மற்றொரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
  • இந்த அம்சத்தின் மூலம், இப்போது வாட்ஸ்அப் பயனர்கள் வீடியோ அழைப்புகளின் போது தங்கள் திரையைப் பகிரலாம், அதாவது ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்.
  • ஸ்கிரீன் ஷேரிங் செய்யும் போது பயனரின் திரையில் என்ன நடந்தாலும் அது வீடியோ கால் ரிசீவருக்கு தெரியும்.
Whatsapp அட்டகாசமான புதிய அம்சம்: இனி இங்கும் ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம் title=

கோடிக்கணக்கான பயனர்களின் இதயத்தை ஆளும் வாட்ஸ்அப், மற்றொரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம், இப்போது வாட்ஸ்அப் பயனர்கள் வீடியோ அழைப்புகளின் போது தங்கள் திரையைப் பகிரலாம், அதாவது ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்.  ஸ்கிரீன் ஷேரிங் செய்யும் போது பயனரின் திரையில் என்ன நடந்தாலும் அது வீடியோ கால் ரிசீவருக்கு தெரியும். இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இப்போது வாட்ஸ்அப்பை அலுவலக கூட்டங்களுக்கும் பயன்படுத்தலாம்.

மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் இந்த புதிய அம்சத்தை பற்றி தனது பேஸ்புக் கணக்கில் அறிவித்துள்ளார். வாட்ஸ்அப்பில் வீடியோ அழைப்புகளில் ஸ்கிரீன் ஷேர் அம்சத்தைச் சேர்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார். வாட்ஸ்அப்பின் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பிரபலமான வீடியோ அழைப்பு செயலியான கூகுள் மீட் மற்றும் ஜூம் ஆகியவை கடும் போட்டியை சந்திக்கும்.

திரை பகிர்வு அம்சத்துடன், வாட்ஸ்அப் இந்த தளத்தில் ஆவணங்கள், ப்ரெசெண்டேஷன் மற்றும் பலவற்றிற்கான அணுகலைத் திறந்துள்ளது. இந்த புதிய அம்சத்தில், குடும்பம் மற்றும் நண்பர்கள் தொழில்நுட்ப ஆதரவைப் பெறுவார்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் பெற்றோர்கள் தங்கள் ஃபோன் அமைப்புகளில் எதையாவது புதுப்பிக்க விரும்பி, ஆனால் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், வீடியோ அழைப்பில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தின் மூலம் அவற்றைப் பற்றி விளக்க முடியும். மீட் அல்லது ஜூம் மூலம் வீடியோ அழைப்பின் போது திரையைப் பகிர்வதில் உங்களுக்கு முழுக் கட்டுப்பாடு இருப்பது போல், வாட்ஸ்அப்பில் வீடியோ அழைப்பின் போது ஸ்கிரீன் ஷேரிங் மீதும் அதே கட்டுப்பாட்டைப் பெறுவீர்கள். அதாவது, பயனர் எப்போது வேண்டுமானாலும் திரையில் உள்ளடக்கப் பகிர்வை நிறுத்தலாம்.

புதிய அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது

வீடியோ அழைப்பின் போது புதிய திரைப் பகிர்வு அம்சத்தைப் பயன்படுத்த, பயனர்கள் ‘Share’ ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு அவர்கள் குறிப்பிட்ட அப்ளிகேஷனைப் பகிர வேண்டுமா அல்லது முழுத் திரையையும் பகிர வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது, ​​வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் 32 பங்கேற்பாளர்களை அனுமதிக்கிறது. அதாவது வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் 32 பேருடன் வீடியோ மீட்டிங் செய்யலாம்.

மேலும் படிக்க | ஆடி தள்ளுபடி! ரூ.15,000க்குள் வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்கள் இதோ!

முன்னதாக திரை பகிர்வு அம்சம் பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இப்போது இது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது. வாட்ஸ்அப் சமீபத்தில் தனது தளத்தில் சேட் லாக், எடிட் பட்டன், எச்டி புகைப்பட தர புதுப்பிப்பு மற்றும் பல சிறந்த அம்சங்களைச் சேர்த்துள்ளது.

வாட்ஸ்அப்பின் சாட் லாக் அம்சம் பயனர்களால் விரும்பப்பட்டு வருகிறது. பயனர்கள் இப்போது தங்கள் தனிப்பட்ட அரட்டைகளை இதன் மூலம் லாக் செய்யலாம். இதன் மூலம் நம் மொபைல் போன் யாரிடம் இருந்தாலும், நமது சேட்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்.

செயலியின் எடிட் பட்டன் அம்சம் பயனர்கள் தங்கள் தவறுகளைத் திருத்த 15 நிமிடங்களை வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் செய்தியை எழுதும் போது ஏதேனும் தவறு செய்திருந்தால், அதை நீங்கள் சரிசெய்யலாம். இருப்பினும், செய்தியைத் திருத்திய பிறகு, அதிக் ‘எடிடட்’ என்று எழுதப்பட்டிருக்கும்.

மேலும் படிக்க | Flipkart Offer: 5000 ரூபாய்க்கும் கீழ் கிடைக்கிறது வாஷிங் மேஷின்... அதுவும் இத்தனை வசதிகளுடன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News