Knowledge News: கம்ப்யூட்டரின் Mouse, மவுஸ் ஆனது எப்படி?

உலகம் முழுவதும் பல விலங்குகள் மற்றும் பொருட்கள் இருந்தாலும், கணினியின் ஒரு பகுதிக்கு மவுஸ் என்று பெயரிடப்பட்டது ஏன்? சுவராசியமானத் தகவல்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 27, 2021, 09:56 PM IST
  • எலி போல தோற்றமளிப்பதால் மவுஸ் என்று பெயரிடப்பட்டது
  • கணினியின் மவுசுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் Turtle
  • இது வயர்லெஸ் மவுஸ் காலம்
Knowledge News: கம்ப்யூட்டரின் Mouse, மவுஸ் ஆனது எப்படி? title=

Knowledge News: மிகவும் பொதுவான அல்லது நம்மைச் சுற்றியுள்ள சாதாரண விஷயங்களைப் பற்றி நாம் பெரும்பாலும் அறியாமல் இருப்போம். மிகவும் சுவாரஸ்யமான’மவுஸ்’ பற்றி உங்களுக்குத் தெரியுமா?

 கணினியில் வேலை செய்யும் அனைவருக்கும் மவுஸைப் பற்றித் தெரியும். கணினித் திரையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல அல்லது ஐகானைக் கிளிக் செய்ய, பயன்படுத்தும் இந்த சுட்டிக்கு எலியின் ஆங்கிலப் பெயர் வைக்கப்பட்டது ஏன்?  உலகம் முழுவதும் பல விலங்குகள் மற்றும் பொருட்கள் இருந்தாலும், கணினியின் ஒரு பகுதிக்கு மவுஸ் என்று பெயரிடப்பட்டது ஏன்? செல்லப்பிராணியாக வளர்க்கப்படாவிட்டாலும், பெரும்பாலான வீடுகளில் குடி கொண்டிருக்கும் எலிக்கும், கணினியின் மவுசுக்கும் இடையிலான தொடர்பு என்ன?

உண்மையில், மவுஸ் கண்டுபிடிக்கப்பட்டபோது, அதற்கு பாயிண்டர் சாதனம் (Pointer Device) என்று பெயரிடப்பட்டது. இந்த கணினியின் முக்கியமான சாதனத்தை 1960களில் டக்ளஸ் கார்ல் ஏங்கல்பார்ட் (Douglas Carl Engelbart) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 2 உலோக சக்கரங்கள் கொண்ட மரத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் மவுஸை கண்டுபிடித்தார் இவரே.  முதல் தலைமுறை கணினிகள் இயங்கிய காலத்தில் மவுஸ் இருந்தது இப்படித்தான்…

mouse
அப்போது ஒரு கணினியின் அளவு கிட்டத்தட்ட ஒரு அறைக்கு சமமாக இருந்தது என்பதும் சுவராசியமான செய்தி…மவுஸ் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அதை வடிவமைக்கும் போது, மவுஸ் ஒரு சிறிய சாதனமாக இருந்தது, அதைப் பார்க்கும்போது, எலி பதுங்கியிருப்பது போல் தோன்றும். மவுசை கணினியுடன் இணைக்கும் ஒயர், எலியின் வால் போல தோன்றுகிறது.

அதேபோல, எலி துரிதமாக செயல்படுவதுபோல, கணினியின் மவுசும் நமது வேலையின் வேகத்தை அதிகரிக்கிறது. இப்படி எல்லாம் யோசித்து தான் மவுஸ் என்று எலியின் ஆங்கிலப் பெயரை கணினியின் முக்கியமான பகுதிக்கு வைத்திருக்கிறார்கள்.

Also Read | உங்கள் கணினியை புதுமையாக்க வருகிறது Windows 11

மவுஸ் என்று பெயர் வைப்பதற்கு முன், கணினியின் இந்தப் பகுதிக்கு வைக்கப்பட்ட பெயர் Turtle என்றும் சிலர் கூறுகின்றனர். அதற்கு காரணம் என்ன தெரியுமா? கணினியின் மவுஸின் மேற்பகுதி, ஆமையின் ஓட்டைப் போல கடினமாக இருப்பதுடன், அதன் தோற்றமும்  ஆமையுடன் பொருந்திப் போகிறது. ஆனால்,  ஆமை மந்தமாக செயல்படும் என்பதால், கணினியின் மவுசுக்கு ஆமை என்ற பொருள்படும் Turtle என்ற பெயர் மாற்றப்பட்டதாம்!!!

ஆமையாக இருந்து எலியாக மாறிய மவுஸ் என்னும் கணினியின் சாதனம் தற்போது புனையைக் கண்ட எலியாய் பதுங்கி வாலை சுருட்டிக் கொண்டுவிட்டது.. அதாவது, புதிய சகாப்தத்தில் கணினியின் மவுஸ், வால் இல்லாமல், வயர்லெஸ் மவுசாக மாறியது. 

நவீன தொழில்நுட்பம் விரவி பரவிவிட்ட இன்றைய காலகட்டத்தில் மவுஸ், தனது வாலை மட்டும் சுருட்டிக் கொள்ளவில்லை புளூடூத் வந்து, மவுஸை காணாமல் போகச் செய்துவிட்டது. காலம், எலியின் கூர்மையான பல்லை, புளூடூத்தின் தொழில்நுட்பம் மழுங்கச் செய்துவிட்டது. இது குறித்தும் நகைச்சுவையான விவாதங்கள் உலா வருகின்றன.

Read Also | 15 இந்திய மொழிகளில் வெளியான HOOTE செயலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News