இறுதியாக இந்தியாவில் புதிய OnePlus 10 Pro வெளியீடு தொடர்பான செய்தியை OnePlus உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் OnePlus 10 Proஅறிமுகப்படுத்தப்படும் என்று Pete Lau அறிவித்தார். இந்த மொபைல் போன் ஜனவரி மாதத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் சொந்த சந்தையான சீனாவில் மிகவும் முன்னதாக OnePlus 10 Pro அறிமுகப்படுத்தப்பட்டதற்கான காரணங்களையும் நிறுவனம் விளக்கியுள்ளது.
சீன சந்தையின் உயர் திறனை OnePlus உணர்ந்துள்ளது. மற்ற பிராண்டுகளுடன் போட்டியிடும் வகையில், ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோவை சீனாவில் முன்கூட்டியே அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது.
மேலும் படிக்க | வெறும் 5 ஆயிரத்திற்கு Vivo 5G Smartphone வாங்க அறிய வாய்ப்பு
கூடுதலாக, உலகளவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ஒரு சாதனத்திற்கு இன்னும் பல ஒப்புதல்கள் தேவை என்றும் நிறுவனத்தின் தலைவர் விளக்கினார்.
புதிய OnePlus 10 Pro மார்ச் 2022 இன் இறுதியில் இந்தியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கிடைக்கும் என்று Pete Lau அறிவித்துள்ளார். MWC 2022 நிகழ்விலும் நிறுவனம் புதிய OnePlus சாதனத்தை முன்னிலைப்படுத்தும்.
இந்தியாவிற்கான புதிய சில்லறை விற்பனை மாதிரி
லாவ் நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய சில்லறை மாடலை அறிமுகப்படுத்துவதாகவும் அறிவித்துள்ளது. ஒன்பிளஸ் ஒரு சாதனத்தை வாங்கும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் அனுபவத்திற்கு இடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | Apple இன் Surgical Strike ! Xiaomi, Vivo மற்றும் OPPO க்கு ஆப்பு
பிராண்டின் அறிக்கையின்படி, “இந்தப் புதிய மாடல் இந்தியாவில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் OnePlus 10 Pro ஆர்டர் செய்த பிறகு, அந்தத் தயாரிப்பை உடனடியாக சில்லறை விற்பனைக் கடையில் வாங்கிக் கொள்ளலாம், எங்கள் ஆஃப்லைன் சேனல்கள் வழங்கும் OnePlus போன்ற சேவைகளை அனுபவிக்கவும் அனுமதிக்கும். ஸ்டோர் உறுப்பினர் உங்களுக்காக தயாரிப்பை அமைத்துள்ளார். இது இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு OnePlus சாதனங்களை விரைவாக டெலிவரி கொடுக்க உதவும். மேலும், ஒட்டுமொத்தமாக OnePlus தயாரிப்புகளுக்கான திருப்தியை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்”.
புதிய 5ஜி ஸ்மார்ட்போன்
ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டு, 5G திறன்களுடன் கூடிய அதிக தயாரிப்புகளை பெரிய அளவில் தொடர்ந்து வெளியிடும் என்று அறிவித்துள்ளது. இந்த புதிய தயாரிப்பு வரிசையில் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் அதன் மிகவும் மலிவு விலை 5G ஸ்மார்ட்போனும் அடங்கும்.
OnePlus புதிய IoT தயாரிப்புகளை ஏற்கனவே உள்ள வகைகளில் வெளியிடுகிறது. இது இந்த ஆண்டில் புதிய IoT வகைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
மேலும் படிக்க | OnePlus 10 Pro டீசர் இணையத்தில் கசிவு
புதிய 150W சார்ஜிங் வேகம்
OPPO ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 150W SUPERVOOC சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும் OnePlus அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த தொழில்நுட்பம் முதலில் OnePlus ஸ்மார்ட்போனில் அறிமுகமாகும்.
வேகமான சார்ஜிங் தனிப்பயனாக்கப்பட்ட இரட்டை பேட்டரி, புதிய பேட்டரி PCB பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த சார்ஜிங் செயல்திறனை மேம்படுத்த ஒருங்கிணைந்த மைக்ரோகண்ட்ரோலர் மூலம் இயக்கப்படுகிறது. 150W SUPERVOOC ஆனது 4,500 mAh பேட்டரியை 1-50% முதல் ஐந்து நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.
மேலும் படிக்க | விரைவில் அற்புதமான போனை அறிமுகம் செய்யும் OnePlus
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR