Poco M3 Pro 5G Smartphone: தள்ளுபடி விலையில் இன்று தொடங்குகிறது விற்பனை

Poco M3 Pro 5G ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் வாங்க இன்று அருமையான வாய்ப்பு. இதை தவற விடாதீர்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 14, 2021, 10:19 AM IST
  • Poco M3 Pro 5G 6.50 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
  • இது 1080x2400 பிக்சல்கள் ரெல்யூஷன் கொண்டது.
  • இந்த தொலைபேசியில் MediaTek Dimensity 700 SoC ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
Poco M3 Pro 5G Smartphone: தள்ளுபடி விலையில் இன்று தொடங்குகிறது விற்பனை title=

Poco  அறிமுகப்படுத்திய லேடஸ்ட் Poco M3 Pro 5G முதல் விற்பனையை இன்று தொடங்குகிறது. இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart)நண்பகல் 12 மணி முதல் இதன் விற்பனை தொடங்குகிறது. இந்த பேசி, சிறந்த தள்ளுபடி விலையில் இதனை வாங்கலாம். தொலைபேசி கூல் ப்ளூ, பவர் பிளாக் மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது. 5000mAh பேட்டரியுடன் 48mAh டிரிபிள் ரியர் கேமரா அம்சம் இந்த போனில் உள்ளது. மேலும் சில சிறப்பு அம்சங்களும் உள்ளன.

விலை & சலுகை

4GB  RAM மற்றும் 64 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட Poco M3 Pro 5G மாடலின் விலை ரூ .13,999, அதன் 6 GB  RAM மற்றும் 128 GB  இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ .15,999. இந்த விற்பனையில், வாடிக்கையாளர்களுக்கு ரூ .500 தள்ளுபடி வழங்கப்படும்.

ALSO READ | Tecno Spark 7T: அசத்தலான் ஸ்மார்ட் போன், அதுவும் பட்ஜெட் விலையில்

விவரக்குறிப்புகள்  (Specifications)

Poco M3 Pro 5G 6.50 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 1080x2400 பிக்சல்கள் ரெல்யூஷன் கொண்டது. இந்த தொலைபேசியில் MediaTek Dimensity 700 SoC  ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. தொலைபேசி ஆண்ட்ராய்டு 11 அப்ரேடிவ் சிஸ்டமில் இயங்குகிறது. அதன் 6 GB  RAM மற்றும் 128 GB  இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டின் ஸ்டோரேஜை  1 டிபி வரை விரிவுபடுத்தலாம்.

கேமிரா (Camera)

Poco M3 Pro 5G  புகைப்படம் எடுப்பதற்காக டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது, இதன் ப்ரைமரி கேமரா 48 மெகாபிக்சல்கள் கொண்டது. இது தவிர, 2 மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் அம்சம் உள்ளது. தொலைபேசியில் செல்ஃபி எடுக்க 8 மெகாபிக்சல் ப்ரண்ட் கேமரா உள்ளது.

பேட்டரி (Battery) மற்றும் இணைப்பு 

பவருக்கு, Poco M3 Pro 5G  ஸ்மார்ட் போனில்  5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் பாதுகாப்புக்காக sஅயிட் மவுண்டட் கைரேகை சென்சார் கிடைக்கிறது. இணைப்பிற்காக, வைபை, புளூடூத், ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப் சி போர்ட் போன்ற அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. போகோ Yellow, Power Black மற்றும் Cool Blue ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

ALSO READ | Smartphones: ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சூப்பரான போன்கள் இதோ

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News