பாதுகாப்பு துறை சார்பில் திருவடந்தையில் பிரம்மாண்டமாக நடைபெறும் ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பங்கேற்ற மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராம் பேசியதாவது:-
பாதுகாப்பு துறையின் உற்பத்தி என்பது "மேன் இன் இந்தியா" திட்டத்தின் இதயம். இந்தியாவில் முதலீடு செய்யுமாறு செங்கோட்டையில் சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
"மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்க அழைக்கிறேன். இந்த ராணுவ கண்காட்சியில் இடம்பெற்றுள்ள 50 சதவீத இந்திய உற்பத்தியாளர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் என்றார்.
50 percent of this Expo has Indian manufacturers, most of them small and medium industries: Defence Minister Nirmala Sitharaman #DefenceExpo2018 pic.twitter.com/qWyCQ6k5tn
— ANI (@ANI) April 12, 2018