மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த நீட் தேர்வினை நாடு முழுவதும் சுமார் 13,26,725 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1,7,288 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக தமிழக மாணவர்களுக்கான தேர்வு மையங்களை வெளிமாநிலங்களில் கொடுத்தப்போது தங்கள் மாநிலத்திலேயே தேர்வு எழுத அனுமதி வேண்டும் என தமிழக மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
எனினும் அவர்களது வேண்டுக்கோளுக்கு நீதிமன்றங்கள் செவிசாய்க்கவில்லை. இதனால் தமிழக மாணவர்கள் ராஜஸ்தான், கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கு பயணித்து தேர்வு எழுதவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேப்போல் புதுவையே சேர்ந்த மாணவர்களும் வெளிமாநிலங்களில் சென்று தேர்வு எழுதுகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வெழுத வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காததால் அவர்கள் அனைவரும் கடும் அவதியில் நிகழ்ந்தள்ளனர். பெற்றோர்கள் அனைவரும் அங்கு உள்ள நடைபாதைகளிலும், மற்றும் கோயில் வாசல்களிலும் காத்திருக்கம் அவதி ஏற்பட்டுள்ளது. வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் அவர்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாயினர்.