ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் மற்றும் சி.ஆர்.பீ.எப் துருப்புக்களை குறைப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு விதிகளை பலவீனப்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ரபேல் போர் விமான விவகாரம் குறித்து காங்கிரஸிடம் கேள்விகளை எழுப்பிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு தற்காலிகமானது எனவும், இந்த பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்த மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இன்று முதல் 2018-19 நிதியாண்டு தொடங்கியது. தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்க்கு ஏற்ப பொருட்களின் விலை மாற்றம் அமலுக்கு வருகின்றன. எந்த பொருட்களின் விலை அதிகரித்தது, எந்த பொருட்களின் விலை குறைந்துள்ளது என பார்ப்போம்.
டெல்லியில் நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 66 பொருள்களுக்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 16-வது கூட்டம் டெல்லியில் நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-
66 பொருள்களுக்கு மொத்தம் 133 பொருள்களுக்கான ஜிஎஸ்டி-யைக் குறைக்க வேண்டுமென்று பரிந்துரை வந்திருந்தது. இதில், 66 பொருள்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. லாட்டரி உள்ளிட்டவை மீதான வரி குறித்து வரும் 18-ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.
நாடு முழுவதும் பொருட்கள், சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரி கொண்டுவரப்படுகிறது. ஜூலை 1-ம் தேதி முதல், இதை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
4 வகையான வரி விகிதங்கள்
பொருட்கள் மீது 5%, 12%, 18%, 28% என 4 வகையான ஜிஎஸ் வரி விகிதங்களை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் தொடங்கியது.
ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டியிலிருந்து கல்வி மற்றும் சுகாதார துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1-ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்த உள்ளதால் எந்தெந்த பொருட்களுக்கு எத்தனை சதவீதம் வரி நிர்ணயிக்கலாம் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று ஸ்ரீநகரில் நடைப்பெற்றது.
இதில் மொத்தம் 1211 பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் 81% பொருட்களுக்கு 18% வரை வரி விதிக்கப்பட உள்ளது.
அரிசி, பருப்பு, பருப்பு போன்ற அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி.,யில் இருந்து விலக்க அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜூலை 1-ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்த உள்ளதால் எந்தெந்த பொருட்களுக்கு எத்தனை சதவீதம் வரி நிர்ணயிக்கலாம் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று ஸ்ரீநகரில் நடைப்பெற்றது.
இதில் மொத்தம் 1211 பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 81% பொருட்களுக்கு 18% வரை வரி விதிக்கப்பட உள்ளது.
அரிசி, பருப்பு, பருப்பு போன்ற அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி.,யில் இருந்து விலக்க அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
விலை குறையும் பொருட்கள் விவரம்:-
ஹெச்1பி விசா விதிமுறைகள் தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி முறையீடு செய்துள்ளார்.
ஹெச்1பி விசா விதிமுறைகளை, இந்திய ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களும் தவறாகப் பயன்படுத்துவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இதன் ஒருபகுதியாக, ஹெச்1பி விசா விதிமுறைகளை கடுமையாக்கி, அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட அனைத்திலும், அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.