சென்னை திருவொற்றியூரில் உள்ள அம்பேத்கரின் சிலை மீது பெயிண்ட் வீசப்பட்டதை தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
முஸ்லிம் மதத்தை சேர்ந்த தனது மனைவியை விவாகரத்து செய்ய 3 முறை ‘தலாக்’ கூறும் 'முத்தலாக்' முறைக்கு தடை விதிக்கும் வகையில் கொண்டுவந்துள்ள வரைவு மசோதாவுக்கு உத்தரபிரதேச மாநிலம் ஒப்புதல் அளித்து உள்ளது.
ஆக்ரா பல்கலைக்கழகம் வழங்கிய மதிப்பெண் சான்றிதழில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆகியோரின் புகைப்படம் இருந்ததால் பரபரப்பு.
உத்தரபிரதேச மாநிலம் பிஆர்டி அரசு மருத்தவக் கல்லூரியில் குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் தொடர் கதையாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இதே மருத்தவக் கல்லூரியில் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் உயிரிழந்தது. அந்த வகையில் தற்போது நவம்பர் 1-ம் தேதியிலிருந்து 4-ம் தேதிக்குள் இதுவரை 58 குழந்தைகள் உயிரிழந்தன.
உயிரிழந்த 58 குழந்தைகளில் 32 பேர் 1 மாதத்தின் கீழ் உள்ளவர்கள் என்றும் மீதமுள்ள 26 பேர் 1 மாதம் பூர்த்தி அடைந்தவர்கள் என்றும் சமூக நலத்துறை தலைவர் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.